பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 131 பார்த்தல், மூக்கால் பார்த்தல், வாயால் பார்த்தல், மெய்யால் பார்த்தல் என ஐவகையினவாம். பார்த்தல் என்பதற்கு அறிதல் என்பது பொருள். கண்ணால் நேரில் பார்த்து அறிந்து கொள்ளுதல், காதால் கேட்டுப் பார்த்தல், மூக்கால் மோந்து பார்த்தல், வாயால் (நாக்கால்) உண்டு சுவைத்துப் பார்த்தல், மெய்யால் தொட்டுப் பார்த்தல் (உடலோடு உரசிப் பார்த்தல்) எனப் பார்த்து அறிதல் ஐவகையின. இங்கே ஒருவர் சொல்ல அறிந்து கொள்ளாமல், தாமே ஐவகைத் துணைச் செயலால் அறிந்து கொள்ளுதல் என்பது நினைவு வரவேண்டும். தந்தை இறந்து கிடப்பதை ஒருவர் சொல்லக் காதால் கேட்டறியாமல், தன் கண்ணா லேயே நேரில் கண்டான் என்னும் பொருளில் கண்ணில் கண்டான்' எனப்பட்டது. மலை உயர்வானது கடல் தாழ்ந்து ஆழமாயிருப்பது - ஒன்றிற்கு ஒன்று எதிர் மாறாயிருப்பது. எனவே, உயர்ந்த மலையில் காண வேண்டியவளைத் தாழ்ந்த கடலில் கண்டான் என இரக்க உணர்வு தோன்றக் கூறப்பட்டுள்ளது. துன்பமே அறியாதவன், வேறு யாருக்கும் @ುಣ6ು - தன் தந்தைக்கே, அதுவும் எளிய துன்பம் அன்று-இறப்புத் துன்பம் ஏற்பட்டிருப்பதைக் கண்டால் எப்படி இருக்கும் அவனுக்கு. அங்கதனின் அழுகை வீழ்ந்து கிடக்கும் தந்தையைக் கண்டி அங்கதனின் கண்கள், தந்தையைக் கொல்பவன் யார் என்ற சினத்தால் கனலையும், பிரிவால் நீரையும்,கலக்கத்தால் குருதியையும் சொரிந்தன். வெண்ணிறமுடைய வாலி திங்கள் மண்டலமே கீழே விழுந்தாற்போல் கிடந்தான். அதன்மேல் விண்ணி லிருந்து ஒரு விண்மீன் விழுந்தாற் போன்று, வாலியின் மேல் அங்கதன் விழுந்து புலம்பினான்: -