பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 - கிட்கிந்தா காண்டத் திறனாய்வு 'கண்டகண் கனலும்நீரும் குருதியும்கால மாலைக் குண்டலம் அலம்புகின்ற குவவுத்தோள் குரிசில்திங்கள் மண்டலம் உலகில்வந்து கிடந்தது.அம் மதியின்மீதா விண்டலம் அதனினின்றோர் மீன்விழுந்தென்ன வீழ்ந்தான்' (149) குரிசில்=அங்கதன், திங்கள் மேல் விண்மீன் விழுந்தாற் போல்.என்னும் உவமை பொருத்தமானது. நாம் காணும் திங்களினும் உயரே சிறியதாய்த் தெரியும் விண்மீன் பெரியதாயிருக்கலாம். ஆனால், நம் கண்கட்குத் திங்கள் பெரியதாகவும் விண்மீன் சிறியதாகவும் தெரிவதைக் கொண்டு இவ்வுவமை பொருந்துவ தாயிற்று. மேலே விழுந்த அங்கதன் புலம்புகிறான்: தந்தையே தந்தையே! நீ இவ்வுலகில் தீமைசெய்யாதது மட்டுமன்று-தீமை நினைத்ததும் இல்லை. அங்ஙனம் இருக் கவும் உனக்கு இந்த நிலை நேரிட்டதேன்? எமன் உன் எதிரேயே வந்தான் எனில், அந்த எமனை வெல்லக் கூடியவர் வேறு யார் உளர். م-- . "எந்தையே எந்தையே இவ் எழுதிரை வளாகத்து யார்க்கும் சிங்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்திலாதாய் நொந்தனை. அதுதான் நிற்க, நின்முகம் நோக்கிக் கூற்றும் வந்ததே யன்றோ அஞ்சாது ஆர்.அதன் வலியைத் தீர்ப்பார்?' (150) எந்தையே-எந்தையே என இரு முறை விளிப்பது, அவனது துயர மிகுதியை அறிவிக்கிறது. யாருக்கும் தீமை செய்யாதது மட்டுமன்று - நினைத்ததும் இல்லை என்று சொல்லியதன் கருத்தாவது:-தீமையை எண்ணினாலேயே