பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 133 செய்ததற்கு ஒப்பாகும் என்பதாகும். உன்பெயரைக் கேட்டாலேயே அஞ்சக்கூடியவன் எமன்-அத்தகையவன் உன் முகத்தெதிரே வந்த நெஞ்சுரம் என்னே! அவனை யாரால் வெல்ல முடியும்? என்று வருந்துகிறான். எதிரேவந்து நிற்பவன் இராமன் தான்-அவனை யாராலும் வெல்ல முடியாதுதான். படக்-படக் எட்டுத்திக்குகளிலும் உள்ள யானைகளை வென்ற வனாகிய இராவணனை நீ உன் வாலால் கட்டி இழுத்துத் திரிந்தாய் அல்லவா? அந்த வாலை நினைத்தாலேயே இராவணனது நெஞ்சம் (இதயம்) படக்-படக் என்று அடித்துக்கொள்ளும் அத்தகைய இராவணனுக்கு இனி அந்த அச்சம் இல்லை. "தறை அடித்ததுபோல் தீராத் தகைய இத்திசைகள் தாங்கும் கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் உன்தன் நிறைஅடிக் கோல வாலின் கிலைமையை கினையுங் தோறும் பறை அடிக்கின்றது அந்தப் பயம்அறப் பறந்தது அன்றே?’ 151) தறை=ஆணி. தரையோடு ஆணி அடித்து நிலைக்கச் செய்தது போல் யானைகள் நிலையாகத்திக்குகளில் உள்ளனவாம். கறை= உரல், கறையடி = உரல்போன்ற அடிகளை உடைய யானை. கண்டகன்=கொடியவன் = இராவணன். வாலியின் வாலை எண்ணினாலே இராவணனின் இதயம் பறைமேளம் அடிப்பதுபோல் அடித்துக்கொள்ளுமாம். இப்போது உலகியலில், மனம் படக்-படக் என்று அடித்துக்கொண்டது என்று சொல் கிறார்களே-அதுபோன்றதுதான் இது. இதை, அவரது