பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 34 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு கடிகாரம் அடிக்கத் தொடங்கிவிட்டது என்று அச்சக் குறிப்பு மொழியாலும் குறிப்பிடுவது உண்டு. அது விரை வாய்ப் பறந்தே போயிற்றே என்று சொல்லும் உலகியல் வழக்கை ஒட்டி, பயன் அறப் பறந்தது (அச்சம் முற்றிலும் பறந்து விட்டது) என்று கூறப்பட்டது. பறத்தல் வேறு பொருள்களின் தொழில். ஆனால், பயம் பறப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தண்டியலங்காரத்தில் உள்ள, 'உரிய பொருளன்றி ஒப்புடைப் பொருள்மேல் தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும்' (25) என்னும் நூற்பாவின்படி இந்த அமைப்பு ‘சமாதி அணி எனப்படும். இதனைத் தமிழில் ஒப்புவினை புணர்ப்பு அணி எனலாம். மேலும் அங்கதன் புலம்புகிறான்: எண்திக்கு மலைகள்சக்கரவாள மலை ஆகியவற்றின் உச்சி முடி நின் கால்களின் தழும்பு படுவன வாகும். இனி அவற்றின் முடியில் உன் காலடித் தழும்பு தோயா. மந்தரமலை - வாசுகிப்பாம்பு ஆகியன கொண்டு அமுதம் எடுக்கக் கடல் கடைந்தாயேஇனிக் கடல் கடைய வேண்டின் யார் உளர்? சிவனைத்தவிர வேறுயாரையும் வணங்காத தந்தையே! கடலைக் கடைந்து நீ தந்த அமிழ்தத்தை உண்டு தேவர்கள் அழியாமல் உளர்; ஆனால் நீ அழிந்து படுகிறாயே! உன்னிலும் உயிர்காக்கும் வள்ளல் வேறு யார் உளர்? "குலவரை கேமிக் குன்றம் என்ற வானுயர்ந்த கோட்டின் தலைகளும் கின் பெற்றாளின் தழும்புஇனித் த்விர்ந்த அன்றே! மலைகொளும் அரவும் மற்றும் மதியமும் பலவும் தாங்கி அலைகடல் கடைய வேண்டின் ஆரினிக் கடைவர் ஐயா" (152)