பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் . 135 "பஞ்சின் மெல்லடியார் பங்கன் பாதுகம் அலாது யாதும் அஞ்சலித்து அறியாச் செய்கை ஆணையாய் அமரர் யாரும் எஞ்சலர் இருந்தார் உன்னால், இன்னமுது ஈந்த நீயோ துஞ்சினை, வள்ளியோர்கள் நின்னின் யார் சொல்லற் பாலார்’ (153) குலவரை = எண் திக்கு மலைகள். நேமிக் குன்றம் = சக்கர வாளகிரி. கோட்டின் தலை = மலை உச்சி. மலை கொளும் அரவு = மத்தாக இருந்த மந்தர மலை முழுவதை யும் கயிறாகச் சுற்றிய வாசுகிப் பாம்பு. பஞ்சின் மெல் அடியார் = பஞ்சு போன்ற மென்மை யான அடியுடைய உமாதேவி. பங்கன் = உமையை இடப் பங்கிலே உடைய சிவன். பாதுகம் = திருவடி. இரண்டு பாடல்களிலும் வாலி கடல் கடைந்தமை கூறப் பட்டுள்ளது. மலையைப் பாம்பால் திரித்துக் கடைவதற்கு மிக்க வலிமை வேண்டும். அவ்வலிமை வாலியினிடத்திருந்தது. வாலி சிவன் அன்பன். சிவனின் திருவடியைத் தவிர வேறு யாரையும் வணங்கி அறியாதவனாம் வாலி. இவன் உறைப்பான சிவப் பற்றாளன் என்பது வேறிடங்களிலும் கூறப்பட்டுள்ளது. இவனை ஒரு வீரசைவன் எனலாமோ? ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்னும் உயரிய கோட்பாட்டை மற்றவர் பின்பற்றாவிடினும், வாலி பின்பற்றியதாகத் தெரிகிறது. தெய்வம் ஒன்றுதான். தெய்வங்கள் எனக் குறிப்பிடப்படுபவர்கள் அருளாளர்களே யாவர். மிக உயர்ந்த மக்கள் தெய்வங்களாக்கப்பட்டனர். இதனாலேயே, திருக்கோயில்களில் தெய்வங்களின் பட்டாளம்