பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு ஆங்காங்கே ஒன்பான் மணிகளின் நிறங்களைக் காட்டு கின்றதாம். பாடல்: 'ஈர்ந்தநுண் பளிங்கெனத் தெளிந்த ஈர்ம்புனல் பேர்க்தொளிர் நவமணி படர்ந்த பித்திகைச் சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால் ஓர்ந்துணர் வில்லவர் உள்ளம் ஒப்பது' (2) - தனக்கென ஒரு நிறம் இன்றி அந்த அந்த மணிகளின் நிறத்தைக் காண்பிப்பதால், தமக்கென ஒரு கொள்கையும் இன்றித் தாம் சார்ந்துள்ளவர்கட்கு ஏற்ப மாறிக்கொண் டிருக்கும் கீழ்மக்களைப் போன்று நீர் உள்ளதாம். இந்தப் பாடலில் முதல் அடியில் குறிப்பிடப்படும் தெளிந்த புனல் என்பது மரபுநிலை, அந்த நீர் மணிகளின் நிறங்கட்கு ஏற்ப மாறுவது சூழ்நிலை. இஃது ஒர் அழகிய புனைவாகும். கிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும்......(452) என்னும் குறள் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. கவிஞர் சொல் பொருள் ஆழமான கிணற்று நீர் தெளிந்திருக்கும் வேளையில், கிணற்றில் அடியில் விழுந்துகிடக்கும் குவளை, குடம் முதலிய பொருள்கள் தெளிவாகத் தெரிவதை நாம் வீட்டுக் கிணறு களில் காணலாம். இங்கே, பம்பைப் பொய்கை பாதாளம் வரையும் ஆழ்ந்து கிடப்பினும் அதன் ஆழத்தின் உள்ள அடிப்பகுதி, கற்பகம் போன்ற கவிஞர்களின் ஆழ்ந்த கருத்துடைய பாடல்கள் தம்மில் தாமே தெளிவாகப் பொருளை அறிவிப்பது போன்று தெளிவாகத் தென் பட்டதாம். பாடல்; "எற்பொரு நாகர்தம் இருக்கை ஈதெனக் கிற்பதோர் காட்சிய தெனினும் கீழுறக் கற்பக மனையவக் கவிஞர் நாட்டிய சொற்பொரு ளாமெனத் தோன்றல் சான்றது' (5)