பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு நிரம்பக் காணப்படுகிறது. அருளாளர்களும் உயர்வு கருதி வணங்கப்பட வேண்டியவர்களே. உயிரினங்களில் ஆண்-பெண் இருப்பது போல், தெய்வங் களிலும் ஆண்-பெண் கற்பித்தனர் மக்கள். அதன் பயனே உமைபங்கன் உருத்தோற்றம். பெண்கட்குச் சம உரிமை கொடுக்க வேண்டும் என்கிறார்களே . இதற்குப் பெயர் என்னவாம்? இதை அறிந்தாவது - இனியாவது, தாங்க ளாகவே சம உரிமை எடுத்துக்கொண்டுள்ள அல்லி அரசிகள் அல்லாத மற்ற மங்கையர்க்குச் சம உரிமை தரவேண்டும். 'தனக்கு மிஞ்சியே தருமம்' என்னும் இழிந்த பழமொழி ஒன்றுண்டு. வாலியோ அமிழ்தத்தை மற்றவர்க்குத் தந்து சாகாநிலை உண்டாக்கித் தான் அமிழ்தம் அருந்தாது இறந்துபடுவதாக அவன் மகன் அங்கதன் கூறியிருப்பது நயமாய்ச் சுவை தருகிறது. புறநானூற்றில் கூறியுள்ளபடி, தனக்கென வாழா நோன்தாள் பிறர்க்கு என முயல்பவனாக வாலி திகழ்ந்திருக்கிறான். மற்றும், ஒளவையார் அதியமான் அஞ்சிமேல் பாடிய "சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே பெரியகள் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே' (235; 1-3) என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதி, தனக்கு மிஞ்சியே தருமம் என்னும் தாழ்ந்த பழமொழியைத் தவிடுபொடி யாக்கிவிடும். வாலி மகனைத் தேற்றுதல் நெருப்பிடைப்பட்ட மெழுகுபோல் உள்ளம் உருகி வருந்தும் மகனை நோக்கி வாலி தேறுதல் கூறுகிறான். நான் இறப்பதற்காக நீ வருந்தற்க, பிறத்தலும் இறத்தலும்