பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 137 மூவுலகத்து உயிர்கட்கும் பொதுவானவை. எனது நல்வினைப் பயனால் திருமாலின் தெய்வப் பிறவியாகிய இராமன்தானே என்னைத் தேடிவந்து வீடுபேறு உதவுகிறான். "தோன்றலும் இறத்தல் தானும் துகளறத் துணிந்து நோக்கின் மூன்றுல கத்தினோர்க்கும் மூலத்தே முடிந்த அன்றே யான்தவம் உடைமையால் இவ்விறுதிவந் திசைந்தது யார்க்கும் சான்றென நின்ற வீரன் தான்வந்து வீடு தந்தான் (155) தோன்றிய பொருள்கள் இறந்தே - அழிந்தே தீரும். உயிர்கள் பிறந்ததிலிருந்தே இறக்கத் தொடங்கி விடுவன. சில உயிர்கள் இறப்பதற்குச் சிலமணி நேரம் - அல்லது சில நாள்கள் - அல்லது சில திங்கள்கள் - அல்லது சில ஆண்டு கள் செலவிடுகின்றன. சில உயிர்களோ எண்பது ஆண்டுகள்நூறு ஆண்டுகள் என இறப்பதற்குப் பல ஆண்டுகள் செலவிடுகின்றன. இங்கே, "நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின்” (334) என்னும் குறளும், மாணிக்கவாசகரின் சாமாறே விரை கின்றேன்', 'வாழாது. வாழ்கிறேன்' என்னும் மணி மொழி களும் எண்ணத் தக்கன. எனவே, தான் இறப்பதற்காக வருந்தாதே என வாலி தன் மகனுக்கு ஆறுதல் கூறுகிறான். ‘சாதலும் புதுவது அன்று என்பது புறநானூறு. நமக்கு மட்டுமே சாவு என்றால் வருந்த வேண்டியதுதான். மூவுலக உயிர்கட்கும் சாவு பொது ஆதலின் வருந்துதற்கு இடமே இல்லை.