பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு மைந்தா இராமன் என்பவன் திருமாலே; எனது தவப் பயனால் திருமாலே என்னிடம் வந்துள்ளார் என்பதில் நல்ல கருத்து உண்டு. தாய்க் குரங்கு தன் குட்டியைத் தான் பற்றாது; குட்டிதான் தாய்க் குரங்கின் அடிவயிற்றுப் பகுதியைப் பற்றிக்கொள்ள வேண்டும். அடியார்கள் தாங்களாக இறைவனைத் தேடிக்கொண்டு போவது இது போன்றதாகும். இது குரங்கு நெறி' எனப்படும். இதை வடமொழியில் மர்க்கட நியாயம் என்பர். குரங்குக்கு எதிர்மாறானது பூனை. பூனை தன் குட்டியைத் தானே கவ்விப்பற்றி எடுத்துக்கொண்டு செல்லும். கடவுளே அன்பர் களைத் தேடிச் சென்று வீடுபேறு அளிப்பது பூனையின் செயல் போன்றதாகும். இது பூனை நெறி எனப்படும். வடமொழியில் மார்ச்சால நியாயம் என்பர். (மர்க்கடம் = குரங்கு. மார்ச்சாலம் = பூனை). இந்த அடிப்படையுடன் வாலியிடம் வருவோம். "சான்றென நின்ற வீரன் தான்வந்து வீடு தந்தான்' என்பதில் உள்ள தான் வந்து பூனை நெறியைக் குறிக் கின்றது. குரங்கு நெறியினும் பூனை நெறி சிறந்தது அல்லவா? எனவே, நீ பாலமை (சிறுபிள்ளைத்தனம்) நீக்கி, இவன் திருமாலே என நம்பிப் பிறவி நோய்க்கு மருந்தாகிய இவனை வணங்குவாயாக இன்னும் ஒன்று சொல்கிறேன் கேள்! இவன் நம் தந்தையைக் கொன்றவனாயிற்றே எனப் பகையுணர்வு கொள்ளற்க. நின் உயிர்க்கு இவன் வாயிலாக உறுதி தேடிக்கொள்க. இராமனை எதிர்த்து யாரேனும் போர் புரியின், நீ இராமன் பக்கம் நின்று பொருது அவனுக்காக நின் உயிரையும் கொடுப்பாயாக - என்று வாலி மகனுக்கு அறிவுரை கூறினான்: