பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 139 "என்னுயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது உன்னுயிர்க்கு உறுதி செய்தி - இவற்கு அமர் உற்றதுண்டேல் பொன்னுயிர்த்து ஒளிரும் பூணாய் பொன்றுதி தருமம் போற்றி மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலரடி சுமந்து வாழ்தி' (157) இறையும் = சிறிதும், பொன்றுதி = இறப்பாயாக. புராணக் கதைகளிலும் இப்போது திரையிடப்படும் நாடகங் களிலும், தன் தந்தையைக் கொன்றவனைப் பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் மைந்தரைக் காணலாம். அவ்வாறு அங்கதன் முயலக்கூடாது என வாலி அறிவுறுத்தியுள்ளான். என்னைக் கொன்றான் என இறையும் சிறிதும் எண்ணாதே என்கிறான். இராமனது மலரடியைத் தாங்கி உன் உயிர்க்கு நல்லது தேடு என்கிறான். இது பிள்ளைப் பற்றினால் சொல்வது மட்டுமன்று - கடைப்பிடிக்கப்பட வேண்டிய நன்னெறியுமாகும். எல்லாவற்றினும் உயர்ந்ததாக ஒன்று கூறுகிறான்; அதாவது: இராமனோடு எவரேனும் போர் புரியின், நீ இராமனுக்கு உதவியாய்ப் பொருது உயிரையும் கொடு என்கிறான். இது வாலியின் மலையத்தனை உயர் பண்பிற்கு உரைகல்லாகும். இங்கே, வேல்கை கொடுத்து வெளிது விரித்துடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே" (279:8-11) என்னும் புறநானூற்றுப் பாடல் ஒத்து நோக்கற்பாற்று. மகனைத் தழுவுதல் இவ்வாறு உய்யும் வழி மகனுக்குப் பல கூறிய பின்னர், மலையினும் உயர்ந்த திண்ணிய தோள்களையுடைய