பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு வாணரத் தலைவனாகிய வாலி தன் இரு கைகளாலும் மகனைத் தழுவிக் கொண்டான். பின்பு இராமனை நோக்கிக் கூறுவானானான்: "என்றனன் இணைய வாய உறுதிகள் யாவும் சொல்லித் தன்துணைத் தடக்கை யாரத் தனயனைத் தழுவிச் சாலக் குன்றினும் உயர்ந்த திண்தோள் குரக்கினத்து அரசன் கொற்றப் பொன்திணி வயிரப் பைம்பூண் புரவலன் தன்னை நோக்கி’ (158) தனயன் = மகன் அங்கதன். குரக்கு இனத்தரசன் = வாலி. துணை = இரண்டு. புரவலன் = இராமன். மரவுரி தரித்துக் காட்டிற்கு வந்துள்ள இராமனை, பொன்திணி வயிரப் பைம்பூண் புரவலன்' என உயர்வகை அணிகலன்கள் அணிந்திருப்பதாகக் கூறலாமா? - என ஒருவர் என்னைக் (சு. ச. வைக்) கேட்டார். திருவிளையாடல் புராணம் - மாமனாக வந்து வழக்குரைத்த படலத்தில், கைம்பெண் ணான ஒருத்தியைத் தாது உலராத கோதை எனப் பரஞ்சோதி முனிவர் குறிப்பிட்டுள்ளார். தாது உலராத பூச்சூடிய பெண் என்பது அதன் பொருள். பெண் என்றதும் இவ்வாறு கூறிவிடுவது புலவர்கட்கு ஒரு மரபாக இருந்து விடுகின்றது. இங்கே இராமனை இவ்வாறு கம்பர் கூறி யிருப்பதும் அது போன்றதே. "நூல் உரை போதக ஆசிரியர் மூவரும் முக்குண வசத்தால் முறை மயங்குவரே' என்பது இதுதான். நிற்க - இறக்கும்போது தந்தை தம் பிள்ளைகட்கு எதிர்கால நடைமுறை பற்றிக் கூறுவதும், உள்ளம் நெகிழ்ந்து தழுவிக் கொள்வதும், பிள்ளையின்