பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t சுந்தர சண்முகனார் 141 கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்வதும் கைக்கு முத்தம் கொடுப்பதும் உலகியல். என் (சு, ச.) தந்தை இறக்கும் போது இவ்வாறு செய்தார்-அழவும் செய்தார். "கடந்தமா முனிவரும் கடப்பரோ மக்கள்மேல் காதல்” என்பது நைடதம். முனிவரே அங்ஙனம் எனில், வாலி மகனைத் தழுவிக் கொள்வதில் வியப்பென்ன? அங்கதன் அடைக்கலம் பின் அங்கதனை இராமனிடம் அடைக்கலப் பொருளாக ஒப்படைக்கிறான் வாலி: பொய்யர்க்குப் புலப்பதாத ஐயனே! அங்கதன் அரக்கர் என்னும் பஞ்சுக்கு நெருப்புப் போன்ற வலிமை உடையவன்; துய்மையான செயலன். இவனை உன்னிடம் கையடைப் பொருளாக அளிக்கிறேன் - என்றான். 'நெய்யடை நெடுவேல் தானை நீல்கிற கிருதர் என்னும் துய்யடை கனலி 'ன்ன தோளினன் தொழிலும் தூயன் பொய்யடை உள்ளத் தார்க்குப் புலப்படாப் புலவ மற்றுன் கையடை யாகும் என்றவ் விராமற்குக் காட்டுங் காலை' (159) நிருதர் = அரக்கர். துய் = பஞ்சு. கையடை = அடைக்கலம். பொய்யடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவன் = இராமன். கடவுள் மெய்யர்க்கு மெய்யராகவும் பொய்யர்க்குப் பொய்யராகவும் இருப்பவராம். நம்பி னோர்க்கு நடராசா நம்பாதவர்க்கு எமராசா என்பது ஒரு முதுமொழி. கடவுள் உள்ளார் என்பவர்க்கு உள்ளவ ராகவும், கடவுள் இல்லை என்பார்க்குப் புலப்படாதவ ராகவும் - அதாவது பொய்யராகவும் இருக்கிறாராம். கம்பர் இந்தக் கருத்தை முன்னோர் மொழிகளிலிருந்து இரவல் வாங்கி யிருக்கலாம். இந்தக் கருத்து, தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் திருமாலை என்னும் நூலில் உள்ள -