பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு "மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா என்னைப் போலப் பொய்யர்க்கே பொய்ய னாகும் புட்கொடி யுடைய கோமான் உய்யப்போம் உணர்வி னார்கட்கு ஒருவனென் றுணர்ந்த பின்னை ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனுர் அரங்க மன்றே (15) என்னும் பாடலிலும், மாணிக்கவாசகரின் திருவாசகம் - திருப்பொற் சுண்ணம் என்னும் பகுதியில் உள்ள - "மையமர் கண்டனை வானகாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன் தன்னை ஐயனை ஐயர்பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோள் பையர வல்குல் மடங்தை கல்லீர் - - - பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே" (12) என்னும் பாடலிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம். கம்பரின் பரந்த நூல் புலமையை இதனால் உணரலாம். வாள் அளித்தல் வாலியின் வேண்டுகோளின்படி இராமன் அங்கதனை அடைக்கலப் பொருளாக ஏற்றுக்கொண்டு தன் உடைவாளை உருவி அங்கதனிடம் கொடுத்தான். இராமனது செயலை உலகமெல்லாம் பாராட்டின. இந்நிலையில் வாலி உயிர் நீங்கி வீடுபேறு எய்தினான்: 'தன்னடி தாழ்தலோடும் தாமரைத் தடங்கணானும் பொன்னுடை வாளைகீட்டி யிேது பொறுத்தி என்றான் என்னலும் உலகம் ஏழும் ஏத்தின; இறந்து வாலி அங்கிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகனானான்’ (160)