பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 143 தாமரைத் தடங்கணான் = இராமன். பொறுத்தி = ஏற்றுள் கொள்க. அங்கதனை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டதற்கு அறிகுறியாக இராமன் தன் உடை வாளைக் கொடுத்தான். இது ஒரு மரபுபோலும். இராமன் இறுதியில் பட்டம் சூடிக் கொண்டபோது, அங்கதன் உடைவாள் ஏந்தியதாகக் கம்பர் பாடியுள்ளார். அந்த வாள் இந்த வாள் தானோ! வீட்டு (மோட்ச) உலகம், மேலே தெரியும் வானுலகத்திற்கு அப்பால் இன்னும் மேலே வேறிடத்தில் உள்ளது போலும் அதனால்தான், வானின் அப்புறத்து உலகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெங் அடைந்தது மார்பில் தைத்த அம்பின் பிடியை வாலி கைவிட்டதும், அந்த அம்பு அவன் மார்பைத் துளைத்து மேலெழுந்து தூய்மையான கடலில் முழுகித் தன்னைத் தூய்மைசெய்து கொண்டு, தேவர்கள் மலர்துவ, இராமனது முதுகைவிட்டுப் பிரியா திருக்கின்ற அம்பறாத் துணிக்குள் வந்து புகுந்ததாம்: “கையவன் ஞெகிழ்த லோடும் கடுங்கனை கால வாலி வெய்ய மார்பகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீப்போய் துய்யtர்க் கடலுள் தோய்ந்து தூய்மலர் அமரர் சூட்ட ஐயன்வெங் விடாத கொற்றத்து ஆவம்வந்து அடைந்த தன்றே (16.1) கால வாலி = பகைவர்க்கு எமன் போன்ற வாலி. துய்ய நீர்க்கடல் = உலகைச் சக்கரவாளம் என்னும் மலை சுற்றியுள்ளதாம்; அதனைச் சுத்தோதக சமுத்திரம் என்னும் பெருங்கடல் சுற்றியுள்ளதாம்; அதுதான் தூய்மையான கடலாம். உதகம் = நீர், சுத்த உதகம் = சுத்தமான நீர்க்கடல் ஆவம் = அம்பறாத்துாணி, வெந் = முதுகு.