பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு வேங்-சொல்லாய்வு இங்கே மாற்றுச் சுவைக்காக, வெந்' என்பது தொடர் பான ஒரு சொல் ஆராய்ச்சி செய்து பார்க்கலாம். தமிழில் வெந் வென் என்பவற்றிற்கு முதுகு என்பது பொருள். வென்னிடுதல் என்றால் முதுகு காட்டி ஓடுதலாகும். தமிழில் உள்ள வென் என்பதோடு ஒலித் தொடர்புடைய வென்வெனு-வென்னு என்பன தெலுங்கிலும், பென்னு’ என்பது கன்னடத்திலும் முதுகைக் குறிக்கும். தெலுங்கில் உகரச் சாரியை மிகவும் பெறப்படும். வெனு-வென்னு என்பன சாரியை பெற்ற உருவம். தமிழ் வகரம் கன்னடத்தில் பகரமாக ஒலிப்பதுண்டு. வெள்ளி என்பது பெள்ளி எனப் படும். கன்னடத்தில் மெய் ஈறு உள்ள சொற்கள் இல்லை. எனவே, வென் என்பதோடு உ. சேர்ந்து பென்னு’ என ஆயிற்று. இந்த வெந் (வென்) என்பதற்கு ஒரு சுவையான இலக்கிய மேற்கோள் காணலாம். தலைவன் தலைவியின் மார்பைத் தழுவ விரும்புகிறான். தென்னங் குரும்பை போன்ற அவளுடைய முலைகளின் குளிர்ச்சியைத் துய்க்கத் துடிக்கிறான். அந்நேரம் அவள் நாணத்தால் தலைவன் பக்கம் முதுகைக் காட்டித் திரும்பி நின்றாள். அப்போது அவன் அவளை நோக்கி, குரும்பை போன்ற முலைகளின் தண்மையைத் துய்க்கவிரும்பும் எனக்கு முதுகைக் காட்டலாமா?- என்று வினவுகிறான். இது ஒரு பாடல் பகுதியால் அறியப்படுகின்றது. "... . . . . . இளங் குரும்பைத் தண்ணீர் அவாவுக்கு வெங் நீர் அளித்தல்தகுதி யன்றே: என்பது அப்பாடல் பகுதி. குரும்பை என்பது குரும்பை போன்ற முலை. தண்ணிர் (தண்நீர்) என்பது குளிர்ந்த தன்மை. வெந்நீர் என்பதை வெந் + நீர் எனப் பிரிக்க வேண்டும். வெந் = முதுகை, நீர் ப. நீங்கள், அளித்தல் =