பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 145 காட்டுதல் முறையன்று என்று கூறுகிறான். இங்கே, தண்ணீர் (குளிர்ந்த பச்சைத் தண்ணீரை) விரும்பியவர்க்கு, வெந்நீர் (சூடான நீர்) அளித்தல் முறையன்று என இரு பொருள் (சிலேடை) தந்து இப்பகுதி சுவை பயக்கின்றது. இந்த வெந்' என்னும் அரிய சொல்லைக் கம்பரும் முதுகு என்னும் பொருளில் ஆண்டுள்ளார். (குறிப்பு:- இது, நூல் பெருக்கத்திற்காக என்னால் எடுத்துக் காட்டப்படவில்லை. சுருக்கத்திற்காக எவ்வளவோ பாடல்களைக் கழித்துவிட்ட யான், நூல் பெருக்கத்திற்காக இதைக் கூற வேண்டிய கட்டாயமில்லை. படிப்பவர்க்கு அலுப்புத் தட்டாமல் இருக்க, ஒரு மாற்றுச் சுவைக்காகவே இதனை இங்கே தந்துள்ளேன்.) இராமன் ஏகல் - வாலி எல்லை இன்ப (வீட்டு) உலகிற்கு ஏகிவிட்டான். இராமன் சுக்கிரீவனின் கையைப் பிடித்துக் கொண்டு, அங்கதனையும் அழைத்துக் கொண்டு அவ்விடத்தினின்றும் அகன்றான். அப்போது வாலியின் மனைவி த்ாரை வந்து வாலியின் உடல்மேல் விழுந்து புலம்பலானாள்: "வாலியம் ஏக, யார்க்கும் வரம்பிலா உலகில், இன்பம் பாலியா, முன்னர் கின்ற பரிதிசேய் செங்கை பற்றி ஆலிலைப் பள்ளி யானும் அங்கத னோடும் போனான் வேல்விழித் தாரை கேட்டாள் வந்துஅவன் மேனி வீழ்ந்தாள்’ (162) வரம்பிலா உலகம் = வீடு பேற்றுலகம், இன்பம் பாலியா = வாலிக்கு வீடுபேற்று இன்பத்தைப் பாலித்து - அளித்து. பாலியா என்பது செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இதனைப் பாலித்து என உடன்பாட்டுப் பொருளாகக் கொள்ளல் வேண்டும். பரிதி சேய் = ஞாயிறின் மகனான சுக்கிரீவன். ஆலிலைப் பள்ளியான் = ஆலிலையில்