பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 11 கற்பகம் எப்பொருளையும் தருவதுபோல், கவிஞர்கள் எப்பொருளைப் பற்றியும் இனிமையாகவும் சிறப்பாகவும் பாடவல்லவர் என்பதைக் கற்பகம் அனைய அக்கவிஞர்' என்னும் தொடர் அறிவிக்கிறது. மற்றும், கற்பகத்தால் பெறும் சுவையையும் இன்பத்தையும் உயர்ந்த புலவர்களின் பாடல்களால் பெறமுடியும் என்பதும் இதனால் போதரும். மேலும், கற்பகம் போல் உயரிய பயனை அளிக்கும் பாடல் களைப் பாடுபவரே உயர்ந்த கவிஞராவார் எனக் கவிஞர்க்கு இலக்கணம் கூறும் தொடராகவும் இது தோன்றுகிறது. 'கருத்து தெளிவாக இருப்பின் உரைநடையாக எழுதுவேன்; கருத்து குழப்பமா யிருப்பின் பாடலாக எழுதுவேன்” - என இரழ்சிய நாட்டு அறிஞர் ஒருவர் நகைச்சுவையாகக் கூறியதாக ஒரு கருத்து சொல்லப்படுவ துண்டு. எனவே, பாடலின் பொருள் தெளிவின்றிப் புரியாமல் குழப்பம் தருவதாய் இருத்தலாகாது; பாடல்களில் உள்ள சொற்களின் - சொற்றொடர்களின் பொருள் தெளிவாய்ப் புரியவேண்டும்; உயர்ந்த கவிஞர்களின் பாடல்கள் அவ்வாறு தெளிவாய்ப் புரியும். அதே நேரத்தில் ஆழ்ந்த கருத்து உடையனவாகவும் இருக்கும். இவ்வாறு பம்பைப் பொய்கை ஆழமும் தெளிவும் ஒருசேர உடைய தெனக் கம்பர் கற்பனைநயம் துளிக்கச் செய்துள்ளார். பிறர், பொருளை விளக்க வேண்டியதில்லாமல் எளிதில் பொருள் புரியும் வாக்கியத்தைத் 'தன்பொருளைத் தானே விளக்கும் வாக்கியம்” என்று கற்பிக்கும் முறை (போதனா முறை) வல்லுநர் கூறுவர். "சவிஉறத்தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவிச் சான்றோர் கவிஎனக் கிடந்த கோதாவரி' (3-5-1) என்னும் கம்பராமாயணப் பகுதி ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது.