பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு படுத்திருக்கும் திருமாலாகிய இராமன். இராமன் சுக்கிரீ வனது கையைப் பிடித்துக் கொண்டு சென்றதாகக் கூறி யிருப்பது, இயற்கையானதும் சுவை பயப்பதுமாகும். அண்ணன் இறந்து கிடக்கும் இடத்தை விட்டுப் பிரிந்துவர உள்ளம் ஒவ்வாத சுக்கிரீவனைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனது உலகியல் நடைமுறையை ஒட்டி உள்ளது. அழுது புலம்பும் அங்கதனையும் அவ்விடத்தி னின்றும் அப்பால் அழைத்துக் கொண்டு போனதும் முற்றிலும் பொருத்தமே. அப்பால் சென்று ஈமச் செயலுக்கு ஏற்றவற்றைச் சூழ்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லவா? தாரையின் துயரம் வாலியின் உடலிலிருந்து வெளியாகும் குருதி தன் மார்பகத்தையும் அவிழ்ந்து தொங்கும் கூந்தலையும் நனைத்துச் செந்நிறம் உடையதாக்க வாலியின் மார்பின் மேல் தாரை புரண்டழுதாள்; குழல், இரங்கல் பண்ணிசைக் கும் விளரி யாழ், வீணை ஆகியவை தோற்கும்படி அழுகுரல் எழுப்பினாள்; விம்மி உருகினாள்; உடையும் கூந்தலும் சரியத் துயரத்துடன் புலம்பலானாள். . தாரையின் புலம்புல் . . - இவ்வளவுதாளும் உன் தோள்களைச் சேர்ந்து வந்தேன். கரை காணமுடியாத துன்பக் கடலைக் கடக்கும் ஆற்றல் உடையோனல்லேன். என் ஆருயிரே! என் உள்ளமே! என் அரசே! யான் மிகவும் அஞ்சுகிறேன்: 'வரைசேர் தோளிடை நாளும் வைகுவேன் கரைசேரா இடர் வேலை காண்கிலேன் உரைசேர் ஆருயிரே என் உள்ளமே அரைசே யான்.இது காண அஞ்சினேன்’ (165) வேலை=கடல் அரைசே - அரசே இது அ-ஐ ஒத்து வந்த இடைப்போலி. என் உயிரே - என் கண்ணே - கண்மணியே