பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 147 என்றெல்லாம் விளிப்பது எல்லாரும் இயற்கையாகச் செய்யக் கூடியது. ஆனால் 'என் உள்ளமே என்று உருவகப்படுத்துவது மிகவும் அருமை. இருவர் உள்ளமும் ஒத்திருப்பவை - ஒருவர் எண்ணுவதை மற்றவரும் ஏற்றுக் கொள்வர் - இருவரும் எண்ணுவது இயற்கையாகவே ஒத்திருக்கும் - என்னும் அரிய கருத்தை என் உள்ளமே என்னும் உள்ளத்தை உருக்கும் விளி வெளிப்படுத்துகிறது. மேலும் புலம்புகிறாள். துயரம் மிக்கும் இன்னும் தொலையாத என்னையும் அழைத்துக் கொள்ள மாட்டாயா? தெய்வமே உயிர்போன பின் உடல் நன்றா யிருக்குமோ? "துயராலே தொலை யாத என்னையும் பயிராயோ பகை யாத பண்பினாய் செயிர் தீரா வினையான தெய்வமே உயிர் போனால் உடலாரும் உய்வரோ (166) இறந்து போனவர்களை விளித்து என்னையும் அழைத்துக்கொள் என்று கூறி அழுவது உலக இயற்கை. சிலர் உண்மையாகவே இவ்வாறு கூறுவர். சிலர் ஒப்புக்கு இவ்வாறு கூறுவர். ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு வீட்டில் ஒரு குழந்தை செத்துப் போயிற்றாம். அந்த வீட்டில் உள்ள மூன்று கிழவிகள், என்னை ஏன் போட்டு வைத்திருக்கிறது - என்னைக் கொண்டுபோய் இந்தக் குழந்தையின் உயிரை விட்டு வைக்கலாகாதா என்று கூறி அழுதார்களாம். உடனே எமன் வந்து மூன்று கிழவிகளையும் அழைத்தானாம். ஒவ்வொரு கிழவியும், நான் சொல்லவில்லை - இவள்தான் சொன்னாள் - இவளை அழைத்துப் போ - அவள்தான் சொன்னாள் - அவளை அழைத்துப் போ - என்று எமனிடம் சொன்னதாக நகைச்சுவையுடன் கதை சொல்வர். வாலி உயிராகவும் தாரை உடலாகவும் இருந்ததாகத் தாரை கூறுகிறாள். உயிர் பிரிந்து உடலுக்கு என்ன நலம்