பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு இருக்க முடியும்? நேரம் ஆக ஆக நாற்றம் எடுக்கும். அப்புறப்படுத்த வேண்டி வரும். எனவே, என் உயிரே! உயிரற்ற உடலாக என்னைச் செய்து விட்டுப் போயினையே என்னும் பொருளில் தாரை புலம்பியிருக்கிறாள். நன்றி மறந்த நமன் ஐயாவே! நீ கடல் கடைந்து தந்த அமிழ்தத்தை எமன் உண்டு உயிர் வாழ்ந்துகொண் டிருக்கின்றான்; ஆனால், நீ செய்த நன்றியை மறந்து உன் உயிரைக் கொண்டு போய் விட்டான். உலகில் ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களோ? சநறிதாம் நல்லமிழ்து உண்ண நல்கலின் பிறியா இன்னுயிர் பெற்ற பெற்றிதாம், அறியாரோ கமனார் அது அன்றெனின் சிறியாரோ உபகாரம் சிந்தியார்’ (167) நன்றி மறப்பவர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்னும் கருத்தைத் தாரை வாயிலாகக் கம்பர் அறிவுறுத்தியுள்ளார். இங்கே, - -- - . - "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்’ (104) "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுகன்று உள்ளக் கெடும்" (109) "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' (108) என்னும் குறள்கள் எண்ணத் தக்கன. மேலும் தாரை புலம்புகிறாள். சிவனை மூன்று வேளையும் பூசனை இயற்றி வழிபடுவாயே. ஏன் இப்போது வணங்காமல் காலம் தாழ்க்கிறாய். உன் தோள்கள் தரை யிலே புழுதியாடிக் கிடக்கின்றனவே. யான் நெடுநேரமாய்ப்