பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 149 புலம்புவது கண்டும், ஏன் என்னோடு உரையாடாதிருக் கிறாய். யான் செய்த குற்றம் யாதோ. என்னை நோக்கி நீ எனது ஆருயிர் என்றாயே அது பொய்யோ. (168,69,70) நெஞ்சில் நிற்றல் - என் நெஞ்சில் நீயும் நின் நெஞ்சில் யானும் இருப்பதாக எண்ணிக் கொண் டிருந்தோமே - அது பொய் போலும் - ஏனெனில், நினது நெஞ்சில் யான் இருந்திருந்தால் உன்னைக் கொன்ற அம்பு என்னையும் கொன்றிருக்க வேண்டும். என் நெஞ்சில் நீ இருந்திருந்தால், என் மேல் அம்பு பாயவில்லை யாதலின் நீயும் சாகாதிருந்திருப்பாய். இவ்விரண்டில் ஒன்றும் நடக்க வில்லை யாதலின், இருவேமும் ஒருவர் நெஞ்சில் ஒருவர் இருந்தோம் என்பது பொய் போலும். "செருவார் தோளகின் சிங்தை உளேன் எனின் மருவார் வெஞ்சரம் எனையும் வெளவுமால். ஒருவே னுள் உளையாகில் உய்தியால் இருவே முள் இருவேம் இருந்திலம்’ (171) ஒருவர் நெஞ்சில் இன்னொருவர் இருப்பதாகக் கூறுவது அன்பின் நெருக்கத்தையும் உருக்கத்தையும் பெருக்கத்தையும் அறிவிப்பதாகும். மன்மதன் சிவனால் எரிக்கப்பட்டபோது அவன் மனைவி இரதியும் இவ்வாறு கூறிப் புலம்பியதாகக் காளிதாசன் குமார சம்பவத்தில் எழுதியுள்ளார். மிதிலை யில் சீதையும் இராமனும் ஒருவரை ஒருவர் கண்டதும், காதல் மீதுாறி ஒருவர் நெஞ்சில் ஒருவர் குடி புகுந்தனராம். இதனை, இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்’ எனச் சுவைபடக் கம்பர் புனைந்துரைத் துள்ளார். இங்கே, புறநானூற்றில் உள்ள - "எங்தை வாழி ஆத னுங்க என் நெஞ்சம் திறப்போர் கின் காண்குவரே (175) என்னும் பகுதி ஒப்பு நோக்கத் தக்கது. கள்ளில் ஆத்திரை