பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு யனார் என்னும் புலவர் நெஞ்சில் ஆதனுங்கன் இருப்பதாகக் கூறப்பட் டுள்ளது. மற்றும், 'நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து' (1128) என்னும் குறளும் ஈண்டு எண்ணி மகிழ்தற்கு உரியது. காதலியின் நெஞ்சில் காதலர் இருப்பதனால், சூடான பொருள் நெஞ்சு வழியாகச் செல்லும் போது காதலர் வெந்து விடுவார் என அஞ்சிக் காதலி சூடான பொருளை உண்பதே இல்லையாம். (ஒருவேளை, தண் என்னும் குளிர்ந்த பொருளை அவள் உண்டால், காதலரைக் குளிர் தாக்கி நடுங்கச் செய்யுமோ?) இங்கே, பிரபு லிங்க லீலையில் உள்ள ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. அதாவது: சொன்னலாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த சித்தராமன் என்பவன் கலியாணபுரம் என்னும் ஊரில் அல்லமர் என்னும் அருளாளரிடம் பேரறிவு பெற்றான். பின்னர், சித்தராமன் தன் நெஞ்சில் கொண்ட ஆசானாகிய அல்லமரோடு தனது ஊராகிய சொன்னலா புரத்தை அடைந்தான். "தொண்ட னாகிய இராமன் சொன்னலா புரத்தில் நெஞ்சில் கொண்ட ஆரிய னோடுஏகி ...... கின்றான்' (19-5) இராமன் = சித்தராமன். ஆரியன் - அல்லமர். சித்தராமன் நெஞ்சிலே அல்ல.மரை வைத்துக்கொண்டு சென்றானாம். இந்தப் பகுதியும் மேல் உள்ளவற்றோடு ஒப்பு நோக்கத் தக்கது. வாயாலே... அமிழ்தத்தையும் பிறர்க்குக் கொடுத்துவிடக் கூடிய வள்ளலே! உயர்ந்தவன் என்று சொல்லப்படுகின்ற இராமன், மறைந்து நின்று அம்பு எய்து நின்னைக் கொல்லாமல்,