பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் } 51 உனது அரசைச் சுக்கிரீவனுக்குக் கொடுத்துவிடு என வாயாலே நீ கூறினால் கொடுத்துவிட மாட்டாயா! "ஓயா வாளி ஒளித்துகின்று எய்வான் ஏயா வந்த இராமன் என்றுளான் வாயால் ஏயினன் என்னின் வாழ்வெலாம் ஈயாயோ அமிழ்தேயும் ஈகுவாய்' (173) நகத்தைக் கொண்டு கிள்ளி எறிய வேண்டியதைக் கோடரி கொண்டு பிளப்பது போல, வாயாலே முடியக் கூடியதை ஒளிந்து அம்பாலே இராமன் முடித்ததாகத் தாரை எண்ணுகிறாள். இராமன் என்று சொல்கிறார்களே அந்தப் பேர்வழி - என்று எள்ளலாய்க் குறிப்பிடுவதுபோல், இராமன் என்றுளான்” எனக் குறிப்பிட்டாள். 'அமிழ்தேயும் என்பது உயர்வு சிறப்பும்மை கொண்டது. வேறு ஓர் வாலி என் ஐயனே! நீ நெருக்கினால் மேரு மலையும் தூள் தூளாகிவிடும். அங்கனமிருக்க, ஒர் அம்பு உன் மார்பைத் துளைப்பதா? இதை என்னால் நம்ப முடியாது. இது தேவர்கள் செய்த மாயமாயிருக்க வேண்டும் எனக் கூறிய தாரை, ஒருவேளை இங்கே இறந்து கிடப்பவன் வேறு ஒரு பொய் வாலியாக - மாய வாலியாக இருப்பானோ என ஐயுறுகிறாள்: 'றோம் மேருவும் நீ கெருக்கினால் மாறோர் வாளி உன்மார்பை ஈர்வதோ தேறேன் யானிது தேவர் மாயமோ வேறோர் வாலி கொலாம் விளிந்துளான்” நீறு = தூள், பொடி. தேறேன் = நம்பேன். விளிதல் = இறத்தல். இறந்து கிடப்பவன் வாலி என்னும் பெயருடைய வேறு ஒருவனாக இருப்பானோ என ஐயுறுவதாக உள்ள பகுதி சுவை நலம் பயக்கிறது.