பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு கருமமே கட்டளை பிறரது துன்பம் போக்கவல்ல வில் மறவராகிய இராமர், மறவர் (வீரர்) எவரும் செய்யத் துணியாத - அடாத செயலைச் செய்துள்ளார். அறநெறி பற்றி நிற்கும் தக்கோர் அளவில் (தக்கோர் விஷயத்தில்), அவர்கள் தக்கோரா யிருப்பதற்கு அவர் புரியும் கருமமே கட்டளைக் கல்லாகும் என்று கூறுவது கட்டுரைக்கும் பொய்யோ? “அருமருந்து அற்றம் அகற்றும் வில்லியார் ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார் தருமம் பற்றிய தக்கவர்க் கெலாம் கருமம் கட்டளை என்றல் கட்டதோ' (177) வில்லியார் = இராமர். மைந்தன் வலிமையுடைய மறவன். அடாதது = மறைந்து நின்று அம்பு எய்த தகாத செயல். கருமம் செய்யும் செயல். கட்டளை = உரைகல். கட்டது = கட்டிச் சொல்லும் பொய்க் கூற்று. இங்கே கம்பர், திருவள்ளுவரின் 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்' (505) என்னும் குறளை வைத்துக் கொண்டு விளையாடி உள்ளார். அதாவது: ஒருவர் பெருமை உடையவரா அல்லது சிறுமை உடையவரா என்பதைக் கண்டறிய, அவர் செய்த செயலே உரைத்துப் பார்க்கும் உரைகல்லாகும் - என்பது குறள் கருத்து. அதன்படி நோக்கின், இழி செயல் செய்த இராமன் எவ்வாறு தக்கவனாவான்? அவனை எல்லாரும் தக்கவன் என்று பாராட்டுகிறார்களே - அங்ஙனமெனில், கருமமே கட்டளைக் கல்’ என்னும் கூற்று பொய்யோ? என ஐயுற்றுப் புலம்புகிறாள் தாரை. பெருமையும் சிறுமையும் தான் தர வருமே” (30) என்பது வெற்றிவேற்கை.