பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 153 இறுதிக்கடன் இன்னவாறு தாரை புலம்பி அழுது துன்பத்தோடு ஒன்றானாள். உணர்விழந்தாள். அப்போது அனுமன், பெண்களைக் கொண்டு தாரையை அந்தப்புரம் ஏகச் செய்து, அங்கதனைக் கொண்டு வாலிக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடனை முடித்து, பின் இராமனிடம் வந்து நடந்தனவெல்லாம் கூறினான். பாடல்கள்: "என்றாள் இன்னன பன்னி இன்னலோடு ஒன்றானாள் உணர்வு ஏதும் உற்றிலாள் கின்றாள் அங்கிலை நோக்கி நீதிசால் வன்தாள் மால்வரை அன்ன மாருதி' (178) 'மடவா ரால் அம்மடங்தை முன்னர்வாழ் இடம் மேவும்படி ஏவி, வாலிபால் கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு உடனாய் உற்ற தெல்லாம் உணர்த்தினான்' (179) தாரை இன்னலோடு ஒன்றானாள் என்பது ஒர் அரிய தொடர். துன்பமே வடிவமாக இருந்தாள் என்று பிறர் சொல்லக்கூடும். கம்பரோ, துன்பம் வேறு - இவள் வேறு என்று பிரிக்க முடியாதபடித் துன்பத்தோடு கலந்து ஒன்றாடு விட்டாள் எனக் கூறியுள்ளார். மாருதி = அனுமன். கண்ணன் = இராமன். கடை காணல் = கடைசிக் கடன் செய்தல். தாரையை அப்புறப் படுத்தியதும் அங்கதனைக் கொண்டு இறுதிக் கடன் செய்வித்ததும் அனுமன் செயலாகக் கூறப்பட்டிருப்பது ஏன்? உடன்பிறப்புப் பங்காளியாகிய சுக்கிரீவன் இவற்றையெல்லாம் செய்தான் என்று ஏன் கூறவில்லை? வாலியைக் கொல்லச் செய்தவன் சுக்கிரீவனே யாதலால், தன்னைக் கண்டு பிறர் தாழ்வாக எண்ணுவர்