பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு என்ற அச்சத்தாலும் நாணத்தாலும் முழு அளவு பங்கு கொள்ளாமல் ஒதுங்கியிருந்தான் என்று கூறலாம் அல்லவா? அடுத்து, இவற்றையெல்லாம் அனுமன் செய்த பின்னர், இராமனிடம் சென்று நடந்தனவற்றையெல்லாம் கூறினா னாம். வாலியைக் கொன்றவன் இராமன் ஆதலின், அவன் ஈமக் கடனைக் காணாமல் ஒதுங்கி எட்டியே இருந்தான். அதனால் அனுமன் சென்று நடந்தன கூறவேண்டியவ னானான். ஞாயிறு மறைவு நிலம் பொலிவு இழக்கும்படி ஞாயிறு மேற்கு மலையில் போய் மறைந்தான். அப்போது ஞாயிறு மண்டலம், பெரிய மறவனாகிய வாலியின் முகத்தை ஒத்து வெண் சிவப்பு நிறம் தட்டியது: "அகம் ஏரற்று உகமீது அருக்கனார் புக மேலைக்கிரி, புக்க போதினில் நகமே ஒத்த குரக்கு நாயகன் முகமே ஒத்தது மூரி மண்டிலம்’ (180) அகம் = கிட்கிந்தையாகிய இடம். ஏர்அறல் = பொலிவு குன்றல். அருக்கனார் = ஞாயிறு. நகம் = மலை. மலையை ஒத்த குரங்கு நாயகன் = வாலி. மூரி மண்டிலம் = சிறந்த ஞாயிறு மண்டிலம். நிலம் பொலிவு குன்றும்படி ஞாயிறு மறைந்தது என்பதில் உள்ள உள்ளுறை உவமம், கிட்கிந்தை யில் உள்ளவர்கள் பொலிவற்று வருந்தும் வண்ணம் வாலி மறைந்தான் என்பதாம். ஞாயிறு மறையும் வேளையில் ஞாயிறு மண்டிலம் வெண் சிவப்பாக - அதாவது செவ்வான மாக இருக்கும். இதற்குக் கம்பரால் கூறப்பட்டுள்ள உவமை, வாலியின் முகமாகும். ஒருவர் இறந்தபோது, முகம் சிரித்தாற் போல் அழகிட்டிருக்கிறது என்று சொல்லும் உலகியல் ஒன்று உண்டு. அவ்வாறே, இயற்கையாக வெண்ணிறமுடைய