பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 155 வாலியின் முகம் சிவந்து அழகிட்டிருப்பதால், ஞாயிறு மண்டிலத்திற்கு ஒப்புமையாகக் கூறப்பட்டது! கம்பரின் உவமை நயம், உலகியலை ஒட்டி இயற்கையாக அமைந்து சுவை பயக்கிறது. மேல் கடலுக்கு நடுவே மலை இருப்பதால் மேலை மலையில் ஞாயிறு மறைந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. இராமனின் நிலைமை ஞாயிறு மறைந்ததும், இராமன் சீதையைப் பற்றி எண்ணி உள்ளம் குழைந்து வருந்தினான். ஒருவாறு இரவு என்னும் கடலை நீந்திக் கடந்தான்: 'மறைந்தான் மாலை அருக்கன், வள்ளியோன் உறைந்தான் மங்கை திறத்தை உன்னுவான் குறைந்தான் நெஞ்சு குழைந்து அழுங்குவான் நிறைந்து ஆர்கங்குலின் வேலை நீந்தினான்’ (181) அருக்கன் = ஞாயிறு. வள்ளியோன் = இராமன். கங்குலின் வேலை - இரவாகிய கடல். சிலர் ஒருவர் வீட்டு இழவுக்குச் சென்று அழும்போது தங்கள் குறையையும் மறைவாக எண்ணி அழுவார்களாம். இங்கே சூழ்நிலை வருத்தமாயிருந்த போது இராமனும் அவன் நிலையை எண்ணி வருந்தினானாம். தாடி பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்ட கதையாய், இந்த இடத்தில் இப்போது இராமனது வருத்தத்தைக் கம்பர் கூறியிருக்க வேண்டியதில்லை. இருப்பினும், நீண்ட இடைவெளிக்குப்பின் கதைத் தொடர்புக்காக இதைக் கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கதை கட்டுவதில் கம்பன் வல்லவனே! நடுநிலைத் தீர்ப்பு கம்பராமாயணத்தில் உள்ள மிக்க சுவையுள்ள பகுதி களுள் வாலி வதைப் படலமும் ஒன்றாகும். வாலியும் இராமனும், இக்காலத்தில் நீதிமன்றத்தில் வாதிடுவது