பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு இடை மயக்கல் நல்லுணர்வுடைய மெய்யறிவாளர்களை உலகக் கட்டுகள் மயக்குதல்போல், பொய்கை நீர் தெளிவா யிருப்பினும், அதிலுள்ள இலைகள் நீரை மறைக்கின் றனவாம். பாடல் காசடை விளக்கிய காட்சித் தாயினும் மாசடை பேதைமை இடை மயக்கலால் ஆசடை நல்லுணர் வனைய தாமெனப் பாசடை வயின்தொறும் பரந்த பண்பது' (8) அடியில் போட்ட காசு தெரியும் அளவுக்குப் பொய்கை நீர் தெளிந்திருந்ததாம். ஊருக்கு உபதேசம் செய்த பலர் பிறகு தாங்கள் உலகப் பற்றால் நிலைதடுமாறவில்லையா? அதுபோல, நீரின் தெளிவு இலைகளால் மறைக்கப்பட்டதாம். கயல்களின் மறைவு கயல் மீன்கள், இராமன் தங்களைக் காணின் சீதையின் கண்கள் நினைவுவர வருந்துவான் என்றெண்ணி நீருக்குள் மறைந்தனவாம். 'களிப்படா மனத்தவன் காணின் கற்பெனும் கிளிப்படா மொழியவள் விழியின் கேள்எனத் துளிப்படா நயனங்கள் துளிப்பச் சோரும்என்று ஒளிப்படா தாயிடை ஒளிக்கும் மீனது' (9) களிப்படா மனத்தவன் = களிப்பு (மகிழ்ச்சி) இல்லாத இராமன். கிளிப்படா மொழியவள் = கிளியால் பேச முடியாத இனிமையுடைய மொழி பேசும் சீதை. விழியின் கேள் = கண்கட்கு ஒப்பானவை. இராமன் கண்ணிர் துளித்து வருந்துவான் என்று மீன்கள் மறைந்ததாகப் புலவர் இயற்கையாக நடந்ததைத் தற்குறிப்பாகக் கூறி யிருத்தல் தற்குறிப்பேற்ற அணியாகும். தெய்வப் பிறவி