பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 15? மனிதனைத் தேடுகிறேன் இப்போது சிலர் மனிதனைத் தேடுவதாகப் பேச்சிலும் எழுத்திலும் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இற்றைக்கு (கி.பி. 1992) இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன், கிரேக்க நாட்டில், டயோனியசு என்னும் பெரியார், பட்டப் பகலில் கையில் விளக்கை வைத்துக்கொண்டு பலர் போகும் தெரு வழியே ஏதோ தேடிக்கொண்டு சென்றாராம். அவரைக் கண்ட ஒருவர், என்ன தேடுகிறீர்கள் என்று வினவினாராம். அதற்கு அப்பெரியார், மனிதர் ஒருவராவது கிடைப்பாரா என மனிதரைத் தேடுகிறேன் என்று கூறினாராம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், திருவொற்றியூரில், நெல்லிக்காய்ப் பண்டாரத் தெருவில், உடையில்லாத அம்மணத் துறவி ஒருவர் ஒரு திண்ணையில் அமர்ந்து கொண்டு, தெருவே போகின்றவர்களையும் வருகின்றவர்களையும் பார்த்து, இதோ ஒரு நாய் போகிறது. இதோ ஒரு நரி போகிறது . இதோ ஒரு பன்றி போகிறது - இதோ ஒரு மிருகம் போகிறது. என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாராம். நடமாடிய மனிதர்கள் அவருக்கு மனிதராகத் தெரியவில்லை. அங்கே நடமாடியவர்கள், இது ஏதோ ஒரு பைத்தியம் என்று சொல்லிக்கொண்டு போய் விட்டார்களாம். இப்போது அவர் இவ்வாறு கூறின், இக்காலத்தார் சிலராவது அவரது உடலைப் பிடித்துவிட்டு ஒத்தடம் கொடுக்கச் செய்துவிடுவார்கள். மேற்கூறிய இரண்டு நிகழ்ச்சிகளையும் கூர்ந்து நோக்குங்கால், டயோனியசும் திருவொற்றியூர்த் துறவியும் செய்தது தவறானது என்ற உண்மை தெரியவரும். மனிதர்கட்கு நடுவில் இருந்துகொண்டே மனிதரைத் தேடுவதாகச் சொல்வது பொருந்தாது. மனிதர் என்றால் இப்படித்தான் இருப்பர். இப்படி இருப்பவர்களே மனிதர்கள்.