பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 - கிட்கிந்தா காண்டத் திறனாய்வு என்னென்ன தீமைகளும் குறைபாடுகளும் இருப்பதனால் மனிதர்களை மனிதராகச் சிலர் எண்ணவில்லையோ அந்தத் தீமைகளும் குறைபாடுகளும் உடையவர்களே மனிதர்கள் ஆவர். ஏசுபிரான், புத்தர், காந்தியண்ணல், வடலூர் வள்ளலார் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள் - இவர்கள் தெய்வநிலை பெற்றவர்கள். எல்லோரையும் இவர்களைப் போல எண்ணிவிடலாகாது. எனவே, மனிதர்களை மனிதர்களாகத்தான் எண்ண வேண்டுமே தவிர, அவர்களை மனிதநிலைக்குத் தாழ்ந்தவர் களாகத் தவறாக எடைபோட்டு, மனிதர் அல்லாதாரைத் தேடிக்கொண்டு - மனிதரைத் தேடுகிறேன் என்று சொல்லுதல் பொருந்தாது. மனிதர் உயர்ந்த பண்புடைய வராகத் திகழ்தல் வேண்டுமென எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், உயர் பண்பில்லா மனிதர்களை மனிதர்கள் அல்லர் என்றெண்ணுவது தவறு. எந்தக் காலத்தில் எல்லா மனிதர் களும் திருந்தினார்கள்?. - இல்லையே! எனவே, மனிதனாக வந்த இராமன், மனைவியைப். பறிகொடுத்த இராமன், மாற்றான் . மனைவின்யப். பெண்டாடியவன் வாலி என்பதை அறிந்த இராமன், மறைந்திருந்து வாலியைக் கொன்றது மனித இயற்கையே - இராமனைப் பொறுத்த வரையிலும் பொருத்தமேயாகும். மற்றும், - வாலியைக் கொன்று சுக்கிரீவனைத் துணை யாகக் கொண்டு ஆறாவது தம்பி என நாடகம் ஆடுவதும், தமையனாகிய இராவணனைக் கொல்லத் தம்பியாகிய வீடணனைப் பயன்படுத்திக் கொண்டு அவனை ஏழாவது தம்பி என நாடகம் ஆடுவதும், நூற்றுக்கு நூறு தன்னலம் நிறைந்த மனித அரசியலே யாகும். இவற்றை யெல்லாம் இணைத்து நோக்கும்போது, வாலி வதைப் படலத்தின் முடிவு பொருத்தமே யாகும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாம்.