பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அரசியல் படலம் சுக்கிரீவனது அரசோம்பும் செயலைப் பற்றிய தாதலின் இது இப்பெயர்த் தாயிற்று. சில சுவடிகளில் சுக்கிரீவன் முடி சூடு படலம் எனவும், வேறு சில சுவடிகளில் சுக்கிரீ வனை முடி சூட்டு படலம் எனவும் இதற்குப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. சில சுவடிகளில், தாரை புலம்புறும் பகுதி இந்தப் படலத்தோடு சேர்க்கப்பட்டுள்ளது. வேறு சில வற்றில் தாரை புலம்புறு படலம் என்னும் பெயரில் தாரையின் புலம்பல் இடம் பெற்றுள்ளது. ஞாயிறு தோற்றம் - ஞாயிறு, தன் மகன் சுக்கிரீவன் முடிசூடிக் கொள்ளப் போகிறான் என்னும் பெரிய மகிழ்ச்சியுடன், அவனது அரண்மனைக்குச் செல்வத் திருமகள் வரவேண்டும் என்னும் நோக்கத்தோடு, அவள் தங்கியிருக்கும் தாமரையின் இதழ் களாகிய கதவுகளைத் தன் கதிராகிய கையால் திறந்து விட்டான்: "புதல்வன் யொன் மகுடம் பொறுத்தலான் முதல்வன் பேர் உவகைக்கு முந்துவான் உதவும் பூமகள் சேர ஒண்மலர்க் - கதவம் செய்ய கரத்தின் நீக்கினான’ (1) புதல்வன் = ஞாயிற்றின் மகனாகிய சுக்கிரீவன். முதல்வன் = ஞாயிறு. பூமகள் = திருமகள். காலையில் இயற்கையாக ஞாயிறு எழுந்ததை, மகன் முடி சூடிக் கொள்வதைக் காண எழுந்ததாகவும், ஞாயிறு தோன்றியதும் இயற்கையாகத் தாமரை இதழ்கள் விரிந்து மலர்வதை,