பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு ஞாயிறு தன் கதிர்க்கையால் திறந்து விட்டதாகவும் கம்பர் தாமாகக் காரணம் கற்பித்து ஏற்றியுள்ளதால், இந்த அமைப்பு தற்குறிப்பேற்ற அணி எனப்படும். இதழ்கள் கதவுகளாகவும், ஞாயிற்றின் கதிர் கையாகவும் உருவகிக்கப் பட்டுள்ளன. சுவையான பாடல் இது. ஞாயிறு இவ்வாறு பலவற்றைக் காணப் புறப்பட்டதாகப் பல இலக்கியங்களில் காணலாம். முடி சூட்டு இராமன் சுக்கிரீவனுக்கு முடிசூட்டி வைக்குமாறு இலக்குவனுக்குப் பணித்தான். முடி சூட்டற்கு வேண்டிய எல்லா ஆயத்தங்களையும் செய்யுமாறு இலக்குவன் அனுமனுக்குப் பணித்தான். அவ்வாறு எல்லாம் செய்யப் பெற்றதும் இலக்குவன் சுக்கிரீவனுக்கு மணிமுடி சூட்டினான். முடிசூடிக் கொண்ட சுக்கிரீவன் சென்று இராமனை வணங்கினான். இராமனின் அறிவுரை . முடிசூடிக் கொண்டு வந்து தன்னை வணங்கிய சுக்கிரீ வனுக்குப் பின்வருமாறு இராமன் அறிவுரை நல்கினான். உன் இருப்பிடம் அடைந்து, செய்ய வேண்டியவற்றை விதி முறைப்படி நன்கு எண்ணிப் பார்த்து, அரசாட்சிக்கு ஏற்ற முறையில் செய்க. மற்றும், போரில் மாண்ட நின் தமையன் மகனாகிய அங்கதனையும் உடன் தழுவிக்கொண்டு செல்வச் செழிப்புடன் வாழ்வாயாக. "ஈண்டுகின் றேகி நீகின் இயல்பமை இருக்கை எய்தி வேண்டுவ மரபின் எண்ணி விதிமுறை இயற்றி வீர பூண்ட பேரரசுக் கேற்ற யாவையும் புரிந்து, போரில் மாண்டவன் மைந்த னோடும் வாழ்திகல் திருவின் வைகி' (7)