பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 161 இராமனின் அரசியல் சூழ்வு அறிவு (இராச தந்திர அறிவு) இங்கே வெள்ளெனப் பளிச்சிடுகின்றது. இராமன் முதலில் முடி பெற்றுப் பின் பங்காளிச்சி யாகிய கைகேயி யால் முடியை இழந்தவன். சில இடங்களில் அண்ணன் இறந்துவிட அவன் மகனுக்குப் பட்டம் கட்டாமல், தம்பி பட்டம் சூட்டிக் கொண்டதும், அது பொறாமல் அண்ணன் மகன் தான் பட்டம் பெறுதற்காகப் போராடுவதை வரலாற்றிலும் காணலாம் - நம் காலத்திலும் காணலாம். எனவே, இராமன் சுக்கிரீவனை நோக்கி, உனக்காக என்னால் கொல்லப்பட்ட உன் தமையன் மகனாகிய அங்கதனைத் தட்டிக் கொடுத்துத் தழுவிக்கொண்டு ஆட்சி புரிவாயாக என அறிவுரை ஈந்தான். • அகலாது அணுகாது மேலும் இராமன் கூறுகிறான். உண்மை அறிவு மிக்க அமைச்சர்களோடும், குற்ற மற்ற நல்லொழுக்கத்தோடு தொழிலில் திறமையுமுடைய போர்ப் படைஞரோடும், உண்மையான தூய அன்போடு பழகுக. ஆனால், அவர் களோடு பழகுவது, மிகவும் எட்டிச் செல்லாமலும் மிகவும் நெருங்காமலும் தேவரைப் போல் நடுத்தரமான நிலையைப் பின்பற்றிச் செயலாற்றுக. "வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்த ரோடும் தீமைதீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவ ரோடும் தூய்மைசால் புணர்ச்சி பேணித் துகளறு தொழிலை யாகிச் சேய்மையோடு அணிமை இன்றித் தேவரின் தெரிய ಕಣ್ಣ வாய்மையும் அறிவும் உடைய அமைச்சரோடு என்பதி லிருந்து அத்தகையோரை அமைச்சராக அமர்த்திக் கொள்ள வேண்டும் என்பதும், தீமை தீர் ஒழுக்கமும் தொழில் திறமையும் உடைய படைஞர் என்பதிலிருந்து அத்தகை யாரைப் படைஞராய் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும்