பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j62 - கிட்கிந்தா காண்டத் திறனாய்வு உய்த்துணரப் படும். குளிர் காய்பவர் நெருப்பை விட்டு சேய்மையில் இருந்தால் குளிர் போகாது-மிகவும் அண்மையில் நெருங்கின் வெப்பம் சுடும்-ஆதலின் நடுத்தரமான இடத்தில் அமர்ந்து குளிர் காய வேண்டும். இது, ஆசிரியரிடத்தில் மாணாக்கர் பழகுவதற்கும் பின்பற்ற வேண்டிய விதியுமாகும் என்பதனை, நன்னூலில் உள்ள "அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி...” (46-1) என்னும் நூற்பாவால் அறியலாம். திருக்குறளில் மன்னரைச் சேர்ந்து ஒழுகும் அமைச்சர் முதலானோரும் இம்முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதனை, "அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்' (691) என்னும் குறட்பாவால் தெளியலாம். திருக்குறளை நன்கறிந்த கம்பர், திருக்குறளில் உள்ளதை மாற்றிப் போட்டு, அரசன் அமைச்சரிடமும் படைஞரிடமும் அவ்வாறு ஒழுக வேண்டும் எனக் கூ றிவிட்டார். அரசன் அவ்வாறு ஒழுகி னால், அமைச்சரும் படைஞரும்கூட அவ்வாறு ஒழுகிய தாகவே பொருள்படும். அதாவது அரசன் சேய்மையில் இருந்தாலும் அண்ம்ையில் இருந்தாலும், அவர்களுக்கும் அரசனுக்கும் உள்ள இடைவெளி அத்தன்மையதேயாகும். இன்னுரை நல்குக. -- சுக்கிரீவா மேலே புகை தெரிந்தால் கீழே நெருப்பு இருக்கும் என்பதை அறியும் உய்த்துணர்வு உலகத்தார்க்கு உண்டு. இவ்வாறு தாமாக அறிவதோடு நூலறிவும் வேண்டற்பாலது. பகை உள்ளம் உடையவ ராயினும் அவர்கட்கும் பயன் தரத்தக்க பண்பினின்றும் நீங்காமல் நகைமுகங் காட்டி நாவால் இனிய நல்லுரை நல்க வேண்டும்.