பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 163 "புகைஉடைத்து என்னின் உண்டுபொங்கு அனல் அங்கு என்றென்னும் மிகையுடைத்து உலகம், நூலோர் வினையமும் வேண்டற் பாற்றே பகையுடைச் சிக்தை யார்க்கும் பயனுறு பண்பின் தீரா நகையுடை முகத்தை யாகி இன்னுரை நல்கு நாவால்” ஒன்றைத் தீர்மானித்து உறுதி செய்வதற்கு உதவியாகக் கருத்தளவை, நூல் அளவை, காட்சியளவை என மூன்று அளவைகள் உண்டு. இவை, வடமொழியில் அனுமானப் பிரமாணம், ஆகமப் பிரமாணம், பிரட்சியட்சப் பிரமாணம் என முறையே கூறப்படும். உய்த்துணர்வாக-உத்தேசமாகக் கருத்தால் அறிவது கருத்து அளவை. நூல்களைப் படித்துப் பல செய்திகளைத் தெரிந்து கொள்வது நூல் அளவை. நேரில் கண்ணால் கண்டு அறிவது காட்சி அளவை. இம் மூன்றிற்கும் மேல் நான்காவது அளவை ஒன்றும் உண்டு. 'கண்ணால் காண்பதும் பொய் - காதால் கேட்பதும் பொய் - திர விசாரிப்பதே (ஆராய்வதே) மெய் என்னும் ஆராய்ச்சி அளவைதான் அது. இங்கே இராமன்ால் சுக்கிரீவனுக்குப் பரிந்துரைக்கபடுவது இரண்டாவது அளவையாகும். பெரும்பாலான மக்கள் தமது சொந்தக் கருத்தளவும் மேலும் காட்சியறிவும் உடையவராயிருக்கக் கூடும். இவை போதா. இவை இரண்டும் ஒருவர் தம்மளவில்_தம் காலத்தில் மட்டும் நட்ப்பவற்றை அறிய உதவும். ஆனால், பல காலங்களில் - பல இடங்களில் வாழ்ந்த பலதரப் பட்ட மக்கள் பல துறைகளைப் பற்றி எழுதியுள்ள நூல் களைப் படிப்பதன் வாயிலாக, படித்தவரும், பலகாலங்களில் பல இடங்களில் வாழ்ந்து பெற்ற பல தரப்பட்ட - பல துறைகளைச் சேர்ந்த அறிவைச் சுருங்கியகாலத்தில்