பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு சுருங்கிய முயற்சியில் பெற்றவராவார். அதனால் அரசியல் முதலிய துறைகளைப் பற்றிய பல நூல்களையும் படிக்க வேண்டும். நூலோர் வினையம்=நூல்களில் சொல்லப்பட் டுள்ள அறிவுரைச் சூழ்வுகள், பகைவரிடத்தும் பயன் நல்கி சிரித்த முகத்துடன் இன்னுரை பேசவேண்டும் - என்கிறான் இராமன். சாம தான பேத தண்டம் என்பவற்றில், இன் முகத்துடன் இன்னுரை கூறிப் பயனும் உண்டாகச் செய்வது சாமமும் தானமுமாகும். பகைவரை வெல்வதற்கு இது பெரிய சூழ்ச்சியாகும். எது நல்க முடியாவிடினும் இன்னுரை வழங்கலாமே! "யாவர்க்குஆம் பிறர்க்கு இன்னுரை தானே என்பது திரு மந்திரம். எதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளிர்” என்பது பாரதியாரின் பயன்மிக்க உரையாகும். ஈண்டு, “நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு" (995) என்னும் குறட்பா எண்ணத்தக்கது. கருதிக் காண்டி - தேவர்க்கும் மருட்சி தரும் அரிய செல்வம் உன்னிடம் வந்துள்ளது. அதைக் கவனமாய்க் கருதிக் காத்தால்தான் உன்னுடையதாக நிலைத்திருக்கும். மூன்றுலகங்களிலும் சரி - முனிவர்கட்குக் கூட, நண்பர், அயலார், பகைவர் என மூவகையார் உளர். என்பதை நினைவில் கொள்க. "தேவரும் வெஃகற்கு ஒத்த செயிரறு செல்வம் அ.துன் காவலுக்கு உரிய தென்றால் அன்னது கருதிக் காண்டி ஏவரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று மூவகை இயலோர் ஆவர் முனிவர்க்கும் உலகம் மூன்றின்' (10) சுக்கிரீவா விழிப்புடன் இருந்து காத்தால்தான் அரசு உன்னதாக நிலைக்கும். நமக்கு எல்லாரும் நண்பராகவோ,