பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் |65 பொதுவானவராகவோ இருப்பர் - பகைவர் இரார் - என்று எண்ணி ஏமாந்து விடாதே. முனிவர்கட்குக் கூட பகைவர் உளர். இந்த உலகத்தில் மட்டுமன்று - மூன்று உலகத்திலும் உண்டு - எனவே, பகை வளர்க்காதே. யார் யாரிடம் எவ்வெவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ - அவ்வவ்வாறு நடந்து கொள்வாயாக - என்ற அறிவுரை மிகவும் இன்றியமையாதது. எடுத்துக் காட்டாக விசுவா மித்திர முனிவரைக் கொள்ளலாம். முனிவர்க்கும் என்பதில் உள்ள உம் உயர்வு சிறப்பு உம்மை. கூனியால் மேலும் கேள்! எவரையும் எளியவர் - அற்பர் - சிறியார் என்று எண்ணிச் செய்யக் கூடாதனவற்றைச் செய்துவிட லாகாது. யான் இளமையில் கூனியின் முதுகில் மண் உருண்டையை எய்ததாலன்றோ, எனக்கு இந்நிலை எய்த, யான் துயர்க் கடலில் வீழ்ந்து தவிக்கிறேன். "சிறியர் என்றிகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்றிங் நெறியிகந்து யானோர் தீமை இழைத்தலான் உணர்ச்சி நீண்டு குறியதாம் மேனி யாய கூனியால் குவவுத் தோளாய் வெறியன எய்தி நொய்தின் வெந்துயர்க் கடலின் வீழ்ந்தேன்' (12) கூனி யென்னும் மந்தரையால் தனக்கு நேர்ந்த பட்டறிவை இராமன் கூறியுள்ளான். எவரையும் எள்ளுதல் கூடாது தானே? வேறு உவமை இல்லை உலகில் மங்கையர் தொடர்பால் நேர்ந்த சாவுகள் பல உண்டு. அதற்குச் சான்று வேண்டுமா! உன் மனைவியைக்