பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 13 யாகிய இராமனாலும், மனைவியைப் பிரிந்த காம வேதனையை விடமுடியவில்லை போலும். . வருந்தும் மெய்யது கம்பர் காமக் களியாட்டம் ஒன்றை மிகுதிப் படுத்திக் கூறியுள்ளார். யானைகள் பொய்கையில் சில வேளைகளில் மூழ்கித் திளைத்தனவாம். வெண்கலக் கடையில் யானை புகுந்தாற்போல என்பர். பொய்கையில் புகுந்தால் மட்டும் என்ன! பொய்கை நீர், நிலை கலங்கிய தோற்றத்துடன் காணப்பட்டதாம். இதற்குக் கடுமையான ஒப்புமை ஒன்றைக் கம்பர் கற்பவர் களிக்கக் கூறியுள்ளார். அதாவது: இரவிலே படுக்கையில் ஆடவர் வந்து தம் விருப்பம் போல் உடல் உறுப்புகளை வலிந்து பற்றி இன்பம் நுகர்வதால் உறுப்புகள் நொந்து போன விலை மகளிரின் வடிவத் தோற்றத்தை ஒத்திருந்ததாம் பொய்கை நீர். பாடல்: "பொங்குவெங் கடகரி பொதுவின் ஆடலின் கங்குலின் எதிர்பொரு கலவிப் பூசலில் அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய்வளை மங்கையர் வடிவுஎன வருந்தும் மெய்யது' (11) வந்தவர் விலை மகளிடம் ஆடும் ஆட்ட அளவிற்குத் தம் மனைவியிடம் ஆட முடியாதாதலால், பொருளை வாரி இறைத்து விலை மகளைப் படாத பாடு படுத்துவார் போலும். அதற்கு விலை மகளும் ஈடு கொடுக்க வேண்டும். அதனால்தான், இந்த முயக்கத்தை, எதிர்பொரு கலவிப் பூசல் அதாவது எதிருக்கு எதிர் நடத்தும் புணர்ச்சிப் போர் என்றார் கம்பர். சில ஆண்டுகட்கு முன் செய்தித் தாளில் படித்த செய்தி ஒன்று நினைவிற்கு வருகிறது. ஓரிடத்தில், செல்வர் ஒருவர் கலவி இன்பம் நுகர அழகிய பெண் ஒருத்தி ஏற்பாடு