பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு கவர்ந்த வாலியின் வரலாறே போதுமே? மற்றும், மங்கையர் தொடர்பாகத் துன்பமும் பழியும் உண்டாகும் என்பதை எங்களைக் கொண்டும் உணர்ந்து கொள்ளலாமே. இதற்கு வேறு உவமை வேண்டிய தில்லையே. 'மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல் சங்கையின் றுண்ர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும் அங்கவர் திறத்தி னானே அல்லலும் பழியும் ஆதல் எங்களிற் காண்டி யன்றே - இதற்குவேறு உவமை உண்டோ?' (13) மங்கையரால் சாவு உண்டு என்பதற்கு வாலி சான்று. அவர்களால் அல்லலும் பழியும் உண்டாகும் என்பதற்கு இராமனும் இலக்குவனும் சான்று. அதாவது: மாய மானைப் பிடித்துத் தரும்படி சீதை வற்புறுத்தியதாலேயே இராமனுக்கு இவ்வளவு அல்லல் நேர்ந்தது. இராமன் சீதைக்குக் காவலாக இலக்குவனை நிறுத்திவிட்டுத் தான் மாய மானின் பின் தொடர்ந்து அதன் மேல் அம்பு எய்த போது, அது இலக்குமணா - இலக்குமணா என்று கத்தியதைக் கேட்டு, இராமருக்கு ஏதோ தவிப்பு-உடனே செல் எனச் சீதை ஏவ, என் அண்ணனுக்கு ஒரு தீங்கும் வராதென்று இலக்குவன் கூற, நீ என்னை அடைவதற்காகப் போக மறுக்கிறாய் என இலக்குவன்மேல் பழி சுமத்தின்ாள். பெண்களால் அல்லலும் பழியும் உண்டு என்பது இதுதான். ஆவதும் பெண்ணால்அழிவதும் பெண்ணால். என்னும் பழமொழியை ஈண்டு நினைவு செய்யின், வனிதையர் யாரேனும் வருந்துவரோ? இதை யான் (சு.ச.) சொல்ல வில்லை - இராமன் சொல்லி யுள்ளான்-அதுவும் யாரேனும் சொல்லக் கேட்டோ அல்லது . நூலில் படித்தோ சொல்ல வில்லை - தன் வாழ்க்கையில்