பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 167 கண்ட உண்மையைக் கொண்டே இவ்வாறு கூறுகிறான். இராமனின் பெருந்துயரம் இங்கே பளிச்சிடுகிறது. தாயென...... குடிமக்கள், நின்னை அரசன் மட்டும் அல்லர் இவர் - தாயுமாவார் இவர் என்று போற்றும்படித் தக்கோரைப் பேணுக. இந்தப் பொதுவிதி ஒருபுறம் இருக்கட்டும். தீயவர்கள் தீமை செய்தபோது, உரிய முறையில் அவர் களைத் தீப்போல சுட்டு ஒறுப்பாயாக! "நாயகன் அல்லன் நம்மை கணிபயங்து எடுத்து நல்கும் தாயென இனிது பேணித் தாங்குதி தாங்கு வாரை ஆயது தன்மை யேனும் அறவரம்பு இகவா வண்ணம் தீயன வந்த போது சுடுதியால் தீமை யோரை' (14) தீயவரை ஒறுப்பதென்றாலும் கொடுமையான முறையில் ஒறுத்தல்கூடாது. எந்த எந்தக் குற்றத்திற்கு எந்த எந்த ஒறுப்பு தரலாமோ, அதை அதைத்தான் தரவேண்டும். அந்தக் காலத்தில் இவ்வளவு அறிவுரை கூறியிருப்பது வியப்பளிக்கிறது. ஆனால், இந்தக் காலத்தில், குற்றம் புரிந்தவர்களுள் சிலர் தப்பித்துக் கொள்வதையும் - சிலர் அளவு கடந்த கொடுமைக்கு ஆளாகுவதையும் உலக அரங்கில் காண்கிறோம். இங்கே, . "குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில்' (549) “கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்' (550) "கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண்' (20 : 64, 65) என்னும் பாடல் பகுதியும் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கன. திருவள்ளுவரிடமும் இளங்கோ வடிகளிடமும் போய்த்தான்