பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு சான்று தேடவேண்டுமா என்ன! சிற்றுரர்களில் உள்ள எளிய நம் அண்ணாத்தைகள்’ கூறும் பழமொழியே சான்றாகப் போதுமே! அதாவது: 'ஆடிக்கறக்க வேண்டிய மாட்டை ஆடிக்கறக்க வேண்டும் பாடிக்கறக்க வேண்டிய மாட்டைப் பாடிக்கறக்க வேண்டும் அப்படியும் முடியாவிடின் அடித்துக் கறக்க வேண்டும்” என்பதுதான் அது. “அற வரம்பு இகவா வண்ணம்' என்பது மிகவும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இவ்வாறு இராமன் சுக்கிரீவனுக்குப் பல வகையான அரசியல் நெறி களைக் கூறிப் பின்னர் நீ கிட்கிந்தை மலைப்பகுதியை அடைந்து அரசுசெய் - மாரிக் காலம் முடிந்ததும் பெரும் படையுடன் என்னிடம் வருவாயாக என்றான். அப்போது, இராமனை நோக்கி, நீங்கள் இல்லாத எங்கள் அரசுச் செல்வம் வறுமையினும் வறுமை போன்றதே. அதனால், சீதையைத் தேடுவதற்கு உரிய காலம் வரும் வரையும் நீங்களும் எங்களுடன் வந்து தங்கியிருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டான். இராமனது மறுமொழி சுக்கிரீவ! யான் நொன்புக் கோலத்துடன் உள்ளவன்; எனவே, இன்பங்கள் நிறைந்த அரசத் தலைநகரில் அரசுச் சார்பில் இருத்தக் கூடாது. மற்றும், நான் அங்கு வந்திருப் பின், என்னை ஒம்புதலிலேயே உங்கள் காலம் கழியும்; அரச வினைகளை ஆற்ற முடியாமல் போகலாம். (20) பதினான்கு ஆண்டுகள் காட்டில் இருப்பதாக வாக்குறுதி கொடுத்து வந்துள்ளேன். எனவே யான் அங்கு வரல் தகாது. மேலும் சீதையைப் பிரிந்த எனக்குச் சீதையோடு கூடி வாழ்வதே சிறந்தது. (21) மேலும் கேள்! மனைவியை அரக்கன் கொண்டுபோய் வைத்திருக்கையில் அவளை மீட்பதைவிட்டு, இராமன் தன்