பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 169 நண்பர்களோடு அளவற்ற இன்பங்களை துய்த்துக் கொண்டுள்ளானே - என்ன ஒழுங்கு இது என்று உலகம் பேசக்கூடிய பழி மூன்று உலகங்களும் முற்றும் அழியும் வரையும் என்றும் நிலைத்திருக்கும். இது முறையோ? (22) எனவே, நீ போய் நல்ல முறையில் அரசு செய்து நான்கு திங்கள் காலம் கழித்துக் கடல் அனைய சேனையோடு வருக என்று அனுப்பினான். பின் அங்கதனை நோக்கி, நீ சுக்கிரீவனை உன் சிற்றப்பன் என்று கருதாமல் உன்னைப் பெற்ற தந்தையாகவே கருதி ஒற்றுமையுடன் உதவி வருவாயாக என்று கூறி அனுப்பினான். இந்த அறிவுரை மிகவும் இன்றியமையாதது. பின்னர், அனுமனை நோக்கி, நீயும் சுக்கிரீவனோடு சென்று அவனுக்குத் துணை யிருப்பாயாக என்ற இராமனுக்கு, அடியேன் உம்முடனேயே இருந்து பணிவிடை செய்வேன் என்றான் அனுமான். அப்போது சிறந்ததோர் அறிவுரையை இராமன் பகர்ந்தான்: ஒரு பேரரசை ஒருவன் ஆண்டபின் வேறொருவன் வலியப் பிடித்துக் கொண்டால், அதனால் நன்மைகளே யன்றித் தீமைகள் பலவும் நேரக்கூடும். நின்னை ஒத்த வல்லவர் இருந்தால்தான் எல்லாவற்றையும் நிலைக்கச் செய்ய இயலும். எனவே நீயும் செல்வாயாக - என்றான் இராமன்: "கிரம்பினான் ஒருவன் காத்த கிறையரசு இறுதி கின்ற வரம்பிலா ததனை மற்றோர் தலைமகன் வலிதின் கொண்டால் அரும்புவ நலனும் தீங்கும் ஆகலின் ஐய கின்போல் பெரும்பொறை அறிவி னோரால் நிலையினைப் பெறுவது அம்மா! (29)