பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு நிரம்பினான் ஒருவன் = வலிமை நிறைந்த வாலியை நினைத்துச் சொல்லப்பட்டது. நிறை அரசு = எல்லா அமைப்புகளும் நிறைந்த அரசு. (வாலியின் அரசு) - வரம்பு (அளவு) அற்ற பெரிய அரசு, அதனை மற்றோர் அரசன் கொண்டால் என்பது, வாலியின் அரசைச் சுக்கிரீவன் கொண்டதைக் குறிக்கிறது. வலிதின் கொண்டால் = வலி-வன்முறையில் கொண்டால் என்பது, மறைந்து நின்று அம்பெய்து கொன்று பெற்றதைக் குறிக்கின்றது. இதனால் நன்மையே யன்றித் தீமையும் உண்டாகலாம் என்பது, வாலியைக் கொன்று பற்றியது கொடுமை என மக்கள் கிளர்ச்சி செய்யலாம் - அல்லது - யாராவது அங்கதனைத் தூண்டிவிட்டு அரசைப் பிடித்துக்கொள்ள வழிசொல்லித் தரலாம் - அல்லது - வேற்றரசர் யாராவது குழப்பமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு படையெடுத்து வந்து பறித்துக் கொள்ளலாம் - என்னும் செயல்களைக் குறிக் கின்றது. இவ்வாறு குழப்பம் உண்டாக்கி முதலில் இருந்தவனே மீண்டும் ஆட்சியைப் பிடித்துக்கொண்ட வரலாறு நிரம்ப உண்டு. இளங்குமணன் தன் அண்ணன் இளங்குமணனைக் காட்டிற்கு ஒடும்படி விரட்டியதும், சிலர் தன் எதிரியைக் கொல்வது அல்லது நாடு கடத்துவதும் குழப்பம் நிலவாமல் இருப்பதற்கேயாம். அங்கேயெல்லாம் போவானேன்? கைகேயி இராமனைப் பதினான்காண்டுகள் காட்டில் இருக்கச் செய்ததும், இராமனால் குழப்பம் நேராமல் இருக்கவேண்டும் என்ற அச்சத்தினால்தான் என்றும் கூறலாம் அல்லவா? - எனவே, பெரும் பொறை அறிவினோரால்தான் ஆட்சியை நிலைக்க வைக்க முடியும் என்றது, எதையும் பொறுக்கும் வலிமையுடைய அனுமனால்தான். சுக்கிரீவனது