பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கார் காலப் படலம் நம் முன்னோர் ஒர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பிரித்துள்ளனர். அவை: கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்பன. இரண்டு திங்கள் (மாதம்) கொண்டது ஒரு பருவம். ஆவணி, புரட்டாசி-கார்காலம். ஐப்பசி, கார்த்திகை - கூதிர் காலம். இப்படியே அடுத்த வற்றையும் இரண்டிரண்டாகக் கொள்ளல் வேண்டும். பண்டைக் காலத்தில் தமிழகத்தில் ஆவணித் திங்களே ஆண்டுத் தொடக்கமாகக் கருதப்பட்டது. தொல்காப்பியரே இவ்வாறே தொடங்கியுள்ளார். வேறு நூல்களிலும் இதற்குச் சான்றுகள் உண்டு. - படலத்துக்குப் பெயர் கார்காலப் படலம் என்று கொடுக்கப்பட்டிருப்பினும், அதைத் தொடர்ந்த கூதிர்காலம் பற்றிய செய்திகளும் இதில் கூறப்பட்டுள்ளன. கார் - கூதிர் ஆன நான்கு திங்களுமே மழைக்காலம் ஆத்லின் பொது வாகக் கார்காலப் படலம் என்னும் பெயர் தரப்பட்டுள்ளது. ஆவணியில் மழை இலேசாகத் தொடங்குகிறது. புரட்டாசி பொன் உருகக் காயும்-மண் உருகப் பெய்யும்’ என்னும் முதுமொழிக்கு ஏற்பப் புரட்டாசியில் பகலில் வெயிலும் இரவில் வலுத்த மழையும் இடம் பெறுவதைக் காணலாம். புரட்டாசியை அடுத்த ஐப்பசி, கார்த்திகை ஆகிய இரண்டு திங்கள்களையே இப்போது மழைக்காலம் எனப்பெரும்பாலான மக்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். . அவ்வாறே கூறுகின்றனர். நான்கு திங்களுமே மழைக்காலம் ஆயினும், மழைபெய்யும் அளவை நோக்கிக் கார், கூதிர்