பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் བར་བ་ལ་བབས་ན་ས་བ་ 173 என இரண்டாக வேறுபடுத்திப் பெயர்கள் வைக்கப் பட்டுள்ளன. கூதிர் காலத்திற்கு வடமொழியில் சரற்காலம்’ என்பது பெயர்; இதுவும் மழைக்காலமாதலின் சில சுவடிகளில் இந்தப் படலத்திற்குச் சரற்காலப் படலம்' என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆவணி கார்காலம் தொடங்கும் திங்கள். கார்த்திகை கூதிர் காலம் முடியும் திங்கள். இந்தப் படலத்தின் இறுதி யில், கூதிர்காலம் முடிவுற, முன்பணிக்காலம் தொடங்குவ தான குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பருவத்தில் அவ்வளவாகக் கதை இடம் பெறவில்லை. கார்காலப் புனைவும் (வருணனையும்) கூதிர்காலப் புனைவுமே பெரிதும் இடம்பெற்றுள்ளன. சுக்கிரீவனுக்கு முடி சூட்டியபின், சீதையைத் தேடக் கார்காலம் முடிந்ததும் வருக என இராமன் அவனுக்குக் கூறியிருந்தான். இந்த நான்கு திங்கள் காலத்தைக் கழிப்பது எவ்வாறு என்று இராமன் கவலைப்பட்டது போன்ற கவலை கம்பருக்கும் வந்து விட்டது போலும். இந்த நான்கு திங்கள் காலத்தில் கதைக்கு மிகுந்த இடம் இல்லையாதலின், காலப் புனைந்துரையாகவே - இயற்கைக் காட்சிப் புனைவாகவே கம்பரும் எழுதித் தள்ளிவிட்டார். இந்தப் படலத்தில் இடம் பெற்றுள்ள கதைப்பகுதி, சீதையின் பிரிவால் கவலையுற்ற இராமன் சீதையை எண்ணி வருந்துவதும், இராமனை இலக்குவன் தேற்றுவதும் ஆகிய பகுதியே. தலைவனைப் பிரிந்த தலைவி வருந்து வதும் தலைவியைப் பிரிந்த தலைவன் வருந்துவதும் பற்றிக் கூறும் தமிழ் இலக்கிய மரபை ஒட்டிக் கம்பர் இப்படலத்தை அமைத்திருப்பதாகத் தோன்றுகிறது. இனிப்படலத்திற்குள் சென்று பாடல்களைப் பார்ப்போம்;.