பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு தூது ஞாயிறு தென் திசையில் உள்ள இலங்கைக்குச் சென்று ஒவியம் போன்ற அழகிய சீதையைத் தேட அனுமான் தென்திசை நோக்கி வரப்போகிறான் என்பதை முன் கூட்டி அறிவிக்கச் செல்லும் தூதுவன் போல, ஞாயிறு தென்திசை ஏகலானான்: 'மாவியல் வடதிசை கின்று மானவன் ஓவிய மேயென ஒளிக்கவின் குலாம் தேவியை நாடிய முந்தித் தென்திசைக்கு ஏவிய தூதென இரவி ஏகினான்’ (1) மானவன் - மனுக்குலத்தில் பிறந்த இராமன். தேவி = சீதை. இரவி = ஞாயிறு. தக்கணாயண காலத்தில் (ஆடி - மார்கழி) தெற்கு நோக்கியும், உத்தராயண காலத்தில் (தை - ஆணி) வடக்கு நோக்கியும் ஞாயிறு சாய்வது.இயற்கையாக நிகழ்வது. ஆனால், ஞாயிறு. தூதுவனாகத் தெற்கு நோக்கிச் சென்றான் என ஆசிரியர் தாமாக.ஒரு காரணத்தை ஏற்றிக் கூறியிருப்பதால், இந்த அமைப்பு. தற்குறிப்பு ஏற்ற அணி எனக் கூறப்படும்: நாடிய = நாட செய்யிய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம். விளக்குப் புகை ஆதிசேடன் தாங்கும். இந்த நிலமே அகலாகவும், கடலே நெய்யாகவும், மேருமலை திரியாகவும், ஞாயிறு விளக்காகவும். அமைந்திருக்க, அந்த விளக்குப் புகையினால், வானம் இருண்டது போன்று வானத்தில் முகில் மூட்டம் காணப் Hl–L–ģil. & ' "பையணைப் பஃறலைப் பாந்தள் ஏந்திய மொய்ங்கிலத் தகளியில் முழங்கு நீர்கெயின் வெய்யவன் விளக்கமா மேருப் பொன்திரி மைஅடுத் தொத்தது மழைத்த வானமே.” (2)