பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 175 பல்தலைப் பாந்தள் = பல தலைகளை உடைய பாம்பு. தகளி = அகல். முழங்குநீர் = ஒலித்துக் கொண்டிருக்கும் நீர்நிலையாகிய கடல். வெய்யவன் = ஞாயிறு. நிலம் அகலாகவும், கடல் நெய்யாகவும், ஞாயிறு விளக்காகவும், மேருமலை திரியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளன. இது உருவக அணி அமைந்த பாடல். இங்கே, பொய்கை ஆழ்வாரின் முதல் அந்தாதி என்னும் நூலிலுள்ள "வையம் தகளியா வார்கடலே கெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடராழி யான்அடிக்கே சூட்டினென் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று' (1) என்னும் பாடலும் 'நெஞ்செனும் அகலில் அன்பாம் நெய்கிறைந்து உள்ளமென்னும் பஞ்சுறு திரியின் உச்சி பற்றிட அல்லமப்பேர் அஞ்சுடர் இலகஏற்றி அருந்தவர் மாயை என்னும் - துஞ்சிருள் அகன்றிருந்தார் தொல்லைமா தவங்கள் செய்து (3:43) என்னும் பிரபுலிங்க லீலைப் பாடலும் ஒப்பு நோக்கத்தக்கன. மெலிவும் தழைப்பும் மழை மூட்டத்தால், சிவனது நஞ்சுண்ட கழுத்தின் கரு நிறம் போல் வானம் இருண்டது; ஞாயிற்றின் வெப்பமான கதிர்ஒளி சிறிது சிறிதாகத் தண்மை அடைந்ததுபோல் மெலிந்து விட்டது; முகில் நீர் மிகக் கொண்டு செழித்துத் தழைத்தது. 'கண்ணுதல் அருங்கடல் நஞ்சம் நுங்கிய கண்ணுதல் கண்டத்தின் காளம் ஆம்என விண்ணகம் இருண்டது, வெயிலின் வெங்கதிர் தண்ணிய மெலிந்தன, தழைத்த மேகமே (3)