பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு செய்யப்பட்டாளாம். ஏற்பாடு செய்தவரை நோக்கித் தமக்கு இரண்டு பிராந்தி பாட்டில்கள் வாங்கி வரச் சொன்னாராம் அச்செல்வர். அந்தப் பெண்ணோ தனக்கு இரண்டு பாட்டில்கள் பீர் வாங்கி வரச் சொன்னாளாம். செல்வர் செய்யும் திருவிளையாடல்களை (சேஷ்டைகளை) யெல்லாம் சமாளிக்க அவளுக்குப் 'பீர் தேவைப்பட்டது போலும். நான் இதை எழுதியது கொச்சைத்தனம் எனலாம் சிலர். ஆனால் கம்பர் எழுதியுள்ளாரே. அதன் விளக்கமே இது. இதழ்நீர் பருகல் மலைத் தேனும், யானையின் மணம் மிக்க மத நீரும் கலந்த பொய்கை நீரைப் பருகிச் சுவையை நுகர்ந்தவர்க்கு அந்த நீர், பெண்டிரின் அதர பானம் என்ப்படும் இதழ் நீரினும் இனித்ததாம். பாடல்: - 'விண் தொடர் நெடுவரைத் தேனும் வேழத்தின் வண்டுளர் நறுமத மழையும் மண்டலால் உண்டவர் பெருங் களி உறலின், ஒதியர் தொண்டயங் கனிஇதழ்த் துப்பின் சான்றது, (12) துப்பு = நுகர்ச்சி. சான்றது = மிக்கது. யானையின் மதம் சுவையாயிருக்கும் போலும், ஒதியர் பெண்கள். பெண்களின் இதழுக்குத் தொண்டைக் கனியை ஒப்பிடுவது இலக்கிய மரபு. இறைவனது வாயைக் கொவ்வைச் செவ்வாய்', என்றார் அப்பர். கணிக்கும் உதட்டுக்கும் உள்ள பொதுத் தன்மை செந்நிறம், இனிப்புச் சுவை ஆகிய இரண்டு மாம். காம வெறியின்போது மகளிரின் இதழ் நீர் சுவையாகத் தெரியும் போலும். எல்லாருமா மகளிரின் இதழ் நீரைப் பருகியுள்ளனர்? இல்லையே! இதழ் நீர்ச் சுவை எப்படி யிருக்கும் என்பதை அறியாதவர்களும் அறியும்படி ஒர் ஒப்புமையின் வாயிலாகத் தஞ்சை வாணன் கோவை