பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு நண்ணுதல் அருங்கடல் = அடைவதற்கு அரிய கடல். நுங்குதல் = விழுங்குதல். கண்ணுதல் = சிவன். காளம் = கருநஞ்சு. வலியவர் மெலிந்தால் மெலியவர் தழைப்பது இயற்கையே. அதுதான் இங்கே கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்து கார்நாற்பது என்னும் நூலிலும் இடம் பெற்றுள்ளது. ஞாயிற்றின் கதிர் வறுமையுற்றதாம் - முகில் செல்வம் பெற்றதாம். பாடல்: 'கடுங்கதிர் கல்கூரக் கார்செல்வம் எய்த நெடுங்காடு நேர்சினை ஈனக்-கொடுங்குழாய் இன்னே வருவர் கமரென்று எழில்வானம் மின்னும் அவர் தூது உரைத்து' (2) என்பது பாடல். ஞாயிறு நல்கூர்தல், கார் செல்வம் எய்தல், நீண்ட கிளைகள் அரும்புவிடல் ஆகியவை நிகழ, தலைவர் இப்போதே வருவார் என வானம் நமக்குத் தூது உரைத்து மின்னுகிறது எனப் பிரிந்திருக்கும் தலைவி கூறுகிறாள் என்பது இந்த இனிய பாடலின் கருத்து. இப்பாடலில், கடுங்கதிர் நல்கூரலும் கார் செல்வம் எய்துதலும் கூறப் பட்டிருப்பது நயமான கற்பனையாகும். நீல வானம் - - நீலமும் கறுப்பும் ஒற்றுமை உடைய நிறங்கள். வானம் நீல (கரு) நிறமாயிருப்பதற்குச் சில உவமைகள் கூறப் பட்டுள்ளன. அவை நஞ்சு, கடல், பெண்டிரின் மையூசிய கண், பெண்டிரின் கூந்தல், வஞ்சனை உடைய அரக்கரின் வடிவம், அரக்கரின் செயல், அரக்கரின் மனம் ஆகியன. "நஞ்சினின் களிர்கெடுங் கடலின் நங்கையர் அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின் வஞ்சனை அரக்கரின் வடிவின் செய்கையின் கெஞ்சினின் இருண்டது நீல வானமே" (4) ஒவ்வோர் உவமைச் சொல்லின் இறுதியில் உள்ள 'இன்' உருபு, ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருளில் உள்ளது.