பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 177 அரக்கரின் வடிவமும் நெஞ்சும் போல் இருண்டது என்பது சரி, ஆனால் அரக்கரின் செய்கையைப் போல் இருண்டது என்னும் உவமை எவ்வாறு பொருந்தும்? புகழ்ச் செயலை வெண்ணிறமாகக் கூறுவது இலக்கிய மரபு. அதற்கு எதிர் மறையான இகழ் தரும் செயலைக் கருநிறமாகச் சொல்வதும் பொருத்தமேயாம். இங்கே, பெரிய புராணத்தில் உள்ள. "பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும் வஞ்ச மாக்கள் வல்வினையும் பரன் அஞ்செ ழுத்தும் உணரா அறிவிலோர் நெஞ்சும் என்ன இருண்டது நீண்டவான்' (305) என்னும் பாடல் ஒப்புநோக்கத் தக்கது. இருண்டதற்கு ஒப்புமையாகப் பெண்களின் உள்ளத்தையும் கூறியிருப்பதற்கு உரிய காரணம் என்ன எனப் பாடல் ஆசிரியராகிய சேக்கிழாரைத்தான் கேட்க வேண்டும் போலும் சேக்கிழார் எங்கே எப்போது யாரிடம் என்னபாடு பட்டிருப்பாரோ! மின்னுக்கெல்லாம் கணவரைப் பிரிந்த மகளிரும் புற்றுக்குள் இருக்கும் பாம்பும் அஞ்சும்படியாக மேலே மின்னல்கள் விட்டு விட்டு மின்னிக் கொண்டிருந்தனவாம். மின்னலுக்கு இரண்டு உவமைகள் தரப்பெற்றுள்ளன. ஞாயிற்றின் தொகுப்பான - மொத்தையான கதிரைப் பல துண்டுகளாக அரிந்த துண்டங்கள் போன்று இருந்தது ஒர் உவமை. இடியின் நாக்கு என்று சொல்லும்படியாக இருந்தது என்பது. மற்றொன்று: "பிரிந்துறை மகளிரும் பிலத்த பாந்தளும் எரிந்துயர் நடுங்கிட, இரவியின் கதிர் அரிந்தன வாமென அசனி காவென விரிந்தன திசைதொறும் மிசையின் மின்னெலாம்” (10) தலைவனைப் பிரிந்த தலைவி வருந்தியிருப்பதாகக் கூறுவது பழைய செய்தி. அதுவும், கார்காலத்தில் வந்து